நேற்று கெனடா, கியுபெக் நகர் பள்ளிவாசலில் மாலை நேரத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிக்காரர்கள் சுட்டதில் அறுவர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
பள்ளிவாசல் இருந்த சுமார் 40 பேமீது மூன்று துப்பாக்கிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
“இங்கு ஏன் இது நடக்கிறது? இது காட்டுமிராண்டித்தனம்”, எனப் பள்ளிவாசலின் தலைவர் முகம்மட் யாங்குய் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த கியுபெக் போலீசார், துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
டிவிட்டரில் கெனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, “இன்றிரவு கெனடியர்கள் கியுபெக் நகர் பள்ளிவாசலில் கோழைத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை எண்ணித் துக்கமடைந்துள்ளனர்” என்றார்.