சவூதி அராபிய எண்ணெய் நிறுவனம் (சவூதி அரேம்கோ), பெட்ரோனாசுடன் சேர்ந்து ஜோகூர், பெங்கேராங்கில் யுஎஸ்27 பில்லியன்(ரிம119.64 பில்லியன்) திட்டத்தில் ஈடுபட முன்வந்து பிறகு விலகிக்கொன்ண்டது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“அத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளும் முடிவு திடீரென்று செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது.
“அப்படியானால், அவர்கள் ஏன் விலகிக் கொண்டார்கள் என்பது தெரிய வேண்டும்”, என பார்டி அமனா நெகரா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் மலேசியாகினியிடம் கூறினார்.