ஃபாட்வா முடிவுகளில் டிஏபி-பிகேஆர் அரசின் தலையீடா? மறுக்கிறார் பினாங்கு முப்தி

mufti பினாங்கு  முப்தி    வான்   சலிம்   முகம்மட்  நூர்,  அம்மாநில   ஃபாட்வா  குழு   செய்யும்  முடிவுகளில்  பிகேஆர்   மாநில    அரசு   தலையிடுவதாக   பாஸ்   கூறிக்கொண்டிருப்பதை    மறுக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை     செய்தியாளர்   கூட்டமொன்றில்  பேசிய   பினாங்கு   பாஸ்    ஆணையர்   பவுசி   யூசுப்,   ஃபாட்வா  முடிவுகளைப்       பேரரசரின்   ஒப்புதலைப்  பெறுவதற்காக      சமர்ப்பிக்குமுன்னர்   அவற்றை    மாநில   ஆட்சிமன்றத்துக்கு   அனுப்பி   வைக்க   வேண்டும்  என   பினாங்கு    அரசு    உத்தரவிட்டிருப்பதாகக்   கூறியிருந்தது   குறித்து    வான்  சலிம்   கருத்துரைத்தார்.

மாநில   அரசின்   உத்தரவு,  ஃபாட்வா  முடிவுகள்   ஒப்புதலுக்காக   பேரரசரிடம்   சமர்ப்பிக்கப்பட    வேண்டும்   என்று  கூறும்   2004, பினாங்கு   இஸ்லாமிய   சமய   நிர்வாகச்   சட்டம்,   பகுதி   48-க்கு   முரணானது   என   பவுசி   கூறியதாகவும்   ஊடகங்களில்    அறிவிக்கப்பட்டிருந்தது.

ஃபாட்வா    விவகாரத்தை     பாஸ்     அரசியலாக்கக்    கூடாது     என்று   வலியுறுத்திய      வான்   சலிம்,     தேசிய   அல்லது    மாநில    ஃபாட்வா  குழுக்கள்   செய்யும்   முடிவுகளை   அரசியல்வாதிகளும்   பொதுமக்களும்   மதிக்க   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார்.