ஹராபான் ஏற்பாடு செய்துள்ள ‘முஸ்லிம் தடை’ கண்டனக் கூட்டத்தில் பாஸ், அம்னோ இளைஞர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்

umnoவெள்ளிக்கிழமை,    கோலாலும்பூரில்,   அமெரிக்கத்    தூதரகக்கு    வெளியில்,   அமெரிக்க    அதிபர்   டோனல்ட்   டிரம்ப்    ஏழு   முஸ்லிம்    நாடுகளின்    குடிமக்கள்   அமெரிக்காவுக்குள்   நுழைய     தடை   விதித்திருப்பதற்கு  எதிராக    பக்கத்தான்    ஹராபான்  ஏற்பாடு   செய்துள்ள   கண்டனக்  கூட்டத்தில்    பாஸ்,  அம்னோ   இளைஞர்   பிரிவுகள்   கலந்துகொள்ள    மாட்டா.

“எதிரணி   ஏற்பாடு   செய்யும்   நிகழ்வுகளில்   நாங்கள்   கலந்து  கொள்ள   மாட்டோம்”,  எனக்  கூட்டரசு   பிரதேச   அம்னோ   இளைஞர்    தலைவர்  ரஸ்லான்   ரபி     மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

ரஸ்லான்,  டிரப்பின்   தடை   உத்தரவைப்  பெரிதுபடுத்த    விரும்பாதவர்போல்   பேசினார்.  அதிபரின்   அந்த   உத்தரவு  “இஸ்லாத்துக்கு    எதிரானது”,  “அடிப்படை   மனித  உரிமைகளுக்கு   எதிரானது”    எனப்   பலரும்   குறைகூறியுள்ளனர்.

“ஏழு    நாடுகளுக்கு    எதிரான   டிரம்பின்   தடையுத்தரவு   ஒரு   நாட்டின்   தனிப்பட்ட   விவகாரம்.  அதை  மனிதாபிமான   விவகாரம்   என்று   சொல்ல  முடியாது. அது   மியான்மாரில்   ரோஹிஞ்யாக்களுக்கு   நிகழ்ந்தது   போன்றதல்ல”,  என்றாரவர்.

பாஸ்   இளைஞர்களும்   ஹராபான்    ஏற்பாடு   செய்துள்ள   கண்டனக்   கூட்டத்தில்   கலந்துகொள்ள    மாட்டார்கள்     என   பாஸ்   இளைஞர்   உதவித்   தலைவர்   முகம்மட்  கைருல்   நிஸாம்  கைருடின்   கூறினார்.

“தடை  உத்தரவுக்கு   எதிராக    நாங்கள்    தனியே   ஒரு   கண்டனக்  கூட்டம்    ஏற்பாடு   செய்வோம்”,  என்றாரவர்.