அரசாங்க மருத்துவமனைகளின் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஏனென்றால், மூன்றாம் வகுப்பு வார்ட் கட்டணம் ஒரு நாளைக்கு ரிம3-தான் அதில் மாற்றமில்லை என்றாரவர்.
முதல், இரண்டாம் வகுப்பு வார்ட் கட்டணங்கள் நீண்ட காலமாக மாற்றமின்றியே இருந்து வந்துள்ளன. எனவேதான் அவற்றை மாற்றி அமைக்க அமைச்சரவை முடிவு செய்தது என்றாரவர்.
ஜனவரி முதல் தேதியிலிருந்து முதல் வகுப்பு வார்ட் கட்டணம் ரிம30-இலிருந்து ரிம45 ஆகவும் இரண்டாம் வகுப்பு கட்டணம் ரிம20-இலிருந்து ரிம25 ஆகவும் உயர்ந்துள்ளது.
அப்படியென்றால் மக்கள் கண்டிப்பாக ஆன் லைனில் முறுக்கு விற்றே ஆகவேண்டும்,
பாவம்! பணக்காரர்களுக்குப் பெரும் பாதிப்பு!
இந்த கூஜா தூக்கியை மந்திரியாக கொண்டது நமது துரதிஸ்ட்மே.
பழனிவேலுவால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதுபோல் இருக்கிறது உங்கள் விளம்பரம் ….. பாவம் நீங்கள் பழனி வேலுவால் துவக்கம் இல்லாமலும் முடிவும் இல்லாமலும் …. நின்ற இடத்திலேயே குழம்புகிறீர்கல் …
மனிதர் அனைவர்க்கும் வருவது தான் ! மருத்துவம் என்பது அனைவர்க்கும் பொது வானது ! இதில் என்ன ஏழைக்கு ஒரு வகுப்பு ! பணம் படைத்தவனுக்கு ஒரு வகுப்பு ! குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவன் மேல் தப்பு கிடையாது ! அரசாங்கத்தின் சில கொள்கைகள் மக்களை அந்த நிலைக்கு தள்ளிவிடுகின்றன ! மக்கள் தவறான வழிகளில் செல்வதற்கு இதுபோன்ற காரணங்கள் தான் வழி அமைக்கின்றன.
அறிவாளி மந்திரி பேசுது.மலேசியாவில் மட்டும் இந்த மாதிரி அறிவாளி துப்புக்கெட்ட அமைச்சர்கள் இருப்பார்கள்.
அரசாங்க மருத்துவமனைகளின் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் ஆனால் உங்கள் மாதரி பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்களோ??
கொஞ்ச காலத்துக்கு முன் சீனி விலை உயர்த்தப்பட்டதை ஆதரித்துப் பேசிய இவர் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்து விட்டது, எனவே இந்த சீனி விலையேற்றம் இனிப்பு நீர் நோயாளிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என்றார்.
எனவே, அந்த சீனி விலயேற்றத்தால் இன்று எந்த அளவுக்கு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைந்துள்ளது என்று அவரும் சொல்லவில்லை. இதுவரை யாரும் இதைக் கேட்கவும் இல்லை. மானங்கெட்ட ஊடகங்களும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றன.