ஈப்போவைச் சுத்தப்படுத்த துப்புரவு தொழிலாளர்களுடன் கைகோத்த எம்பி

zamrபேராக்   மந்திரி   புசார்   ஜம்ரி   காடிர்   வேலையில்   உயர்வு   தாழ்வு   பார்க்க   மாட்டார்.   அதை   நிரூபிப்பதுபோல்   இன்று   காலை     அவர்   துப்புரவுத்    தொழிலாளர்களுடன்    சேர்ந்து   ஈப்போ   நகரில்   குப்பைகளை   அகற்றும்   பணியில்   ஈடுபட்டார்.

“காலை  6.45க்கு,  நகரைச்   சுற்றிலும்   குப்பைகளை   அள்ளுவதற்காக    நான்  ஈப்போ  மாநகர்  மன்ற(எம்பிஐ)  ஊழியர்களுடன்   சேர்ந்துகொள்ள    அவர்கள்   திகைத்துப்   போனார்கள்”,  என  டிவிட்டரில்   ஜம்ரி  பதிவிட்டிருந்தார்.

எம்பிஐ    ஊழியர்போல்    ஆரஞ்ச்  நிறச்  சீருடையும்   கையுறைகளும்   அணிந்து   குப்பைகளை   அள்ளுவதைக்  காண்பிக்கும்  படமொன்றையும்    அவர்    பதிவேற்றம்    செய்திருந்தார்.

பெரித்தா   ஹரியானும்   கைகளில்  உறை   அணிந்த   ஜம்ரி,  குப்பைப்  பை   ஒன்றைக்   குப்பை    வண்டியில்   தூக்கிப்போடுவதைக்   காண்பிக்கும்   படமொன்றை   வெளியிட்டிருந்தது.

மந்திரி    புசார்,   பசார்  புந்தோங்,   குட்டி   இந்தியா,,  பசார்  புசார்   ஈப்போ    ஆகிய   பகுதிகளில்     துப்புரவுத்   தொழிலாளர்கள்   குப்பைகளை   அகற்ற   உதவியதுடன் தெருக்களைக்  கூட்டிச்  சுத்தப்படுத்தும்   பணியிலும்   ஈடுபட்டார்   என   அந்நாளேடு   கூறிற்று.