அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா இன்றிரவு நியு சிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார். திரும்பியதும் முதல் வேலையாக அவர் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தைச் சந்திப்பார்.
நேற்றிரவு முகநூலில் இதைத் தெரிவித்த முன்னாள் மாரா தலைவருமான அனுவார், ஊழல்தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“10-மணி நேரப் பயணத்துக்குப்பின் சோர்வாக இருந்தாலும் ஒரு வாரத்துக்குமேல் அதிக தொடர்பில்லாமலிருக்கும் குடும்பத்தினரையும் ஊடக நண்பர்களையும் சந்திக்க முடியும் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
“எம்ஏசிசி அதிகாரிகளின் கடமையைச் செய்ய போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் அதற்காக எம்ஏசிசி அலுவலகம் திறப்பதற்கு முன்பே அங்கு செல்வேன்”, என்றாரவர்.
கடைசியாக கூட போகலாம்! முதலீடு இல்லாத வேலைதானே!