துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானின் மகன், பிர்டுஸ் தாஜுடின் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கலவரம் செய்ததற்காக நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
அவருடன் மேலும் எழுவரும் குற்றம் சாட்டப்படுவார்கள் என கோலாலும்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் கூறினார்.
மூன்று பெண்கள் உள்பட, அந்த எண்மரும் 33 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
“கலவரம் செய்ததாக குற்றவியல் சட்டம் 147வது பிரிவின்கீழ் அவர்கள்மீது குற்றம் சாட்டப்படும்”, என அமர் சிங் தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் செய்தி கூறியது.
நவம்பர் 24-இல் நிகழ்ந்த சம்பவத்துக்காக அவர்கள்மீது குற்றம் சாட்டப்படுகிறது. அச்சம்பவத்தில் பாசிர் சாலாக்கைச் சேர்ந்த கும்பல் ஒன்று ஷா ஆலம் எம்பி நாடாளுமன்றம் வந்தபோது அவரைத் தாக்கியது.
காலிட் நாடாளுமன்ற விவாதத்தின்போது பாசிர் சாலாக் எம்பியான காலிட்டை “சியால்” என்று சொல்லித் திட்டியிருக்கிறார் அதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் அவரை நாடாளுமன்றம் சென்று தாக்கியுள்ளது.
இதெல்லாம் சும்மா கண்துடைப்பு! இரண்டு சாத்து சாத்து சாத்தினால் புத்தி வரும்! சாட்டப்பட்டால் வெளியே சுற்றுவார்!