கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பினாங்கைக் கூட்டரசுப் பிரதேசமாக்கலாம் என்று பரிந்துரைத்தது அம்மாநில ஆளுனரை அவமதிப்பதாகாது என கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் கூறினார்.
தெங்கு அட்னான் அப்படிச் சொன்னது ஆளுனரை அவமதிப்பதாகும் என டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங் குற்றஞ்சாட்டிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.
தெங்கு அட்னான் நேற்று ஒரு நேர்காணலில் லங்காவியையும் கூட்டரசுப் பிரதேசமாக மாற்றலாம் என்று முன்மொழிந்திருந்தார்.
கோலாலும்பூர், புத்ரா ஜெயா, லாபுவான் ஆகியவை கூட்டரசு அரசாங்கத்தின் நேரடிப் பார்வையின்கீழ் வந்த பின்னர் எம்ஆர்டி திட்டம் உள்பட பல ஊக்குவிப்புகளைப் பெற்றிருப்பதாக யோங் கூறினார்.
“மக்களின் நன்மைக்காக தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தும் அல்லது பரிந்துரையும் ஊக்குவிக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
கிளாந்தானையும்.பெர்லிஸ்.கெட்டா.பேராக்
அனைத்து மாநிலமும் கூட்டரசு பிரதேசமாக
உருமாற்றிவிடலாம்.என்னங்கடா உங்கள்
தலை உள்ளே இருப்பது ஊழலுக்கு வழி
தேடுதா?
ஆக்கலாம் தான்! அப்பத்தான் கூட்டாக சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கலாம்!