தைப்பூச திருவிழாவில் வெள்ளி மற்றும் தங்க ரத ஊர்வலங்கள் நடத்துவதற்கு ஏதுவாக பெப்ரவரி 8 இல் பினாங்கில் பல சாலைகள் மூடப்பட்டு பின்னர் படிப்படியாக திறக்கப்படும்.
இரு ரத ஊர்வலங்கள் புறப்பட்டு திரும்பி வரும் நேரங்களையும் அவை பயன்படுத்தும் சாலைகளின் பெயர்களையும் பட்டியலிட்ட திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி மிஒர் பாரிடாலாதிராஸ் வாஹிட், அச்சாலைகளைப் பயன்படுத்த விரும்பும் வாகனமோட்டிகள் டிராபிக் போலீசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்படி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்விரண்டு ரத ஊர்வலங்களின் போது அதிகப்படியான போலீசார் கடமையில் இருப்பார்கள். இத்திருவிழாவிற்கு 1.5 மில்லியன் மக்கள் வருகையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாரவர்.
தைப்பூச திருவிழாவின் போது குழப்பம் விளைவிக்கும் நோக்கம் கொண்டுள்ள தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாஹிட் கடும் எச்சரிக்கை விடுத்தார்.