சரவாக் சீனர்களின் குடியுரிமை பிரச்னைகளுக்குத் தீர்வு காண பணிக் குழு

dpmசரவாக்கில்  உள்ள   மலேசிய    சீனர்கள்   குடியுரிமை   பெறுவதற்கு    உதவ   சிறப்புப்  பணிக்  குழு   ஒன்று   அமைக்கப்படும்   எனத்   துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி    இன்று   கூறினார்.

அப்பணிக்குழு   சரவாக்     தேசியப்    பதிவுத்துறையின்கீழ்   செயல்படும்   என்றாரவர்.

“குடியுரிமை   இல்லாப்  பிரச்னைமீது   எனக்கு  மிகுந்த   அக்கறை   உண்டு. அப்பிரச்னைக்கு   முற்றுப்புள்ளி   வைக்கக்   கடப்பாடு   கொண்டுள்ளேன்.

“அப்பிரச்னையால்  (மலேசிய)   இந்தியர்கள்,  தீவகற்ப   பூர்வ  குடிகள்,  கிழக்கு  மலேசிய    சுதேசி   மக்கள்   ஆகியோரும்  பாதிக்கப்பட்டுள்ளனர்”,  என   கூச்சிங்கில்   மாநில   அரசும்     தென்  கூச்சிங்  சீனர்   சமூகமும்   கூட்டாக    ஏற்பாடு     செய்திருந்த   சீனப்   புத்தாண்டு   நிகழ்வில்    கலந்துகொண்டபோது   உள்துறை   அமைச்சருமான    அவர்   கூறினார்.