அரசாங்கம் எரிபொருள் விலை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்கிட வேண்டும் அப்போதுதான் எதிரணியினர் பொதுமக்களுக்குத் தப்பான தகவல்கள் கொடுப்பதைத் தடுக்க முடியும் என்கிறது மசீச.
எரிபொருள் விலை உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான முறையில் நடந்து கொண்டால் எதிரணியினர் “உண்மைகளைத் திரித்துக் கூற வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என மசீச பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் லாவ் சின் கொக் கூறினார்.
அண்மைய விலை உயர்வை அடுத்து பொதுமக்கள் வதந்திகளை நம்பத் தொடங்கும் அபாயம் இருக்கிறது என்றாரவர்.
“எதிரணித் தலைவர்கள் சிலர் தங்களை வல்லுனர்கள் என நினைத்துக் கொண்டு பொறுப்பற்ற முறையில் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இது அரசாங்கத்துக்குப் பெரும் தீங்காய் அமைந்திருக்கிறது”, என லாவ் ஓர் அறிக்கையில் கூறினார்.
விலை ஏறும் பொழுது 20 சென்,30 சென் என்று ஏறுகிறது.அதுவே விலை இறங்கும் பொழுது 5 சென் என்று இறக்க்குகிறது.இது எப்படி இருக்கு….
ஆட்சியில் இருக்கும் உங்களுக்கே தெரியாது என்பதுதான் வேடிக்கை.
அரசாங்கத்தில் ‘அங்கம்’ வகிப்பதாகக் கூறிக்கொள்ளும் ம.இ.கா ம.சீச. எவனுக்குமே இது தெரியாதே..இதுபோன்ற ‘திகம்பர’ ரகசியங்கள் எத்தனை எத்தனையோ…