அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் “மலேசியாவைப் பாதுகாப்போம்” வட்ட மேசை மாநாட்டிற்கு நஜிப் ரசாக் அழைக்கப்பட்டிருப்பது பிரதமருக்கு ஒரு புதிய துவக்கத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் என்று லிம் கிட் சியாங் கூறுகிறார்.
ஊழல் மிகுந்த நாடு என்று உலகளவில் மலேசியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை அகற்றுவதற்கு ஒரு புதிய துவக்கத்தை உருவாக்க நஜிப்புக்கும் அவரது அமைச்சரவைக்கும் “மலேசியாவைப் பாதுகாப்போம்” வட்ட மேசை மாநாட்டைவிட வேறு என்ன சிறந்த தளம் இருக்க முடியும் என்று கிட் சியாங் அவரது வலைதளத்தில் கூறியுள்ளார்.
இந்த வட்ட மேசை மாநாட்டின் செயலாளர் லியு சின் தோங், டிஎபியின் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர், மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை நஜிப்புக்கும் இதர அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
பெப்ரவரி 7 இல் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் நஜிப் மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயறை அகற்றுவதற்கான அவரின் வியூகத்தை முன்மொழியலாம் என்று கிட் சியாங் மேலும் கூறியுள்ளார்.
நெகிரி மாநில ஹிண்ட்ராப் ஆண்டு பொது கூட்டம் அறிவிப்பு