தைப்பூச திருவிழாவன்று அமைதியும் நல்லிணக்கமும் ஓங்கச் செய்வீர், குலசேகரன்

 

m-kulasegaranதைப்பூசத் தினத்தன்று தண்ணீர் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஈப்போ பாரட் குழு செய்து முடித்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக தைப்பூச விழாவிற்கு ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் தண்ணீர் மற்றும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

ஈப்போ பாரட்டின் தண்ணீர் பந்தல் காலை மணி 9.30 லிருந்து செயல்படும் என்றும் அது ஈப்போ ஜாலான் அண்டர்சனில் அமைந்திருக்கும் ஒய்எம்சிஎ (YMC)க்கு எதிர்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் குலசேகரன் கூறினார்.

கோயிலுக்கு வருகை அளிக்கும் பக்தர்களை முறையான உடை அணிந்திருக்கும்படி கேட்டுக்கொண்ட குலா, பொருத்தமற்ற உடை அணிந்து கோயிலுக்குச் செல்வது இந்நாட்டில் ஒரு பெரிய விவகாரகமாக உருவெடுத்து வருகிறது என்றார். இதனை நாம் நிச்சயமாக தவிர்க்க வேண்டும் என்றாரவர்.

பினாங்கு மாநிலத்தில் முதன்முறையாக தங்க ரத ஊர்வலம் நடத்தப்படவிருக்கிறது. அதற்கு தமது முழு ஆதரவையும் குலா தெரிவித்துக் கொண்டார்.

குப்பைகளையும் மதுபான போத்தல்களையும் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் போடுமாறு கூறிய குலா, தயவு செய்து திருநாளன்று மது அருந்த வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார். இத்திருவிழாவன்று அமைதியும் நல்லிணக்கமும் ஓங்கச் செய்வோம் என்று அவர் மேலும் கூறினார்.