மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஊழல் எதிர்ப்பதற்கு உதவியாக அரசாங்க ஊழியர்களின் சொத்துப் பிரகடனத்தைப் பார்வையிட தங்களை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது.
இக்கோரிக்கையைச் சொத்துப் பிரகடனங்களைத் திரட்டி வைத்துள்ள பொதுச் சேவைத் துறையிடம் தெரிவித்திருப்பதாக எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கைகள்) அஸாம் பாகி கூறினார்.
“அத்தரவுத்தளம் செல்லும் வாய்ப்பு கிட்டுமானால், முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் உள்பட, சிலரைப் புலனாய்வு செய்யவும் கண்காணிக்கவும் முடியும்”, என்றாரவர்.
சந்தேகத்துக்குரிய குற்றச் செயல் நிகழ்ந்திருப்பதாக “முதல் தகவல் அறிக்கை” இல்லாமல் அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கையில் இறங்க முடியாது, நடப்புச் சட்டத்தில் அதற்கு இடமில்லை என அஸாம் தெரிவித்தார்.
MACC ஒன்றும் நடக்காது- அரசு ஊழியர்கள் என்றால் ஆளும் கட்சி அரசியல் வாதிகளை முதலில் ஆராய வேண்டும்– பிறகு எல்லா அரசு ஊழியர்கள்– காவல் சுங்கத்துறை போன்ற இலாக்காக்கள் கட்டாயமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.