பாஸ்: பிகேஆரும் பெர்சத்துவும் பக்கத்தானை விட்டு வெளியேறினால் எதிரணி மேலும் வலுப்பெறும்

pasஎதிரணி   மேலும்   வலுவுடன்   விளங்க    முடியும்.  அதற்கு   பிகேஆரும்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து (பெர்சத்து)வும்   பக்கத்தானை   விட்டு    விலகி    மூன்றாவது   அணியில்   சேர   வேண்டும்   என்கிறது   பாஸ்.

அது  14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி   பிஎன்னைத்   தோற்கடிக்கக்  கூடுதல்  வாய்ப்பாக  அமையும்   என  பாஸ்   உதவித்   தலைவர்   முகம்மட்   அமார்  நிக்   அப்துல்லா   கூறினார்.

“அவ்விரு  கட்சிகளும்   பாஸ்   தலைமையில்   செயல்படும்    மூன்றாவது   கூட்டணி(ககாசான்   செஜாத்ரா)யுடன்   இணைந்தால்   எதிரணியின்   வலிமை      பன்மடங்கு   அதிகரிக்கும்.

“டிஏபி,  அமனா    தவிர்த்து   வேறு   எந்த   எதிர்க்கட்சியும்  ககாசான்   செஜாத்ராவுடன்   இணைவதை     வரவேற்கிறேன்.  அதில்  பார்டி   ஈக்காத்தான்  பங்சா  மலேசியா(ஈக்காத்தான்),  என்ஜிஓ-கள்,  மற்றும்   சிறுசிறு   கட்சிகள்   உறுப்பு   வகிக்கின்றன”,  என்றவர்   சொன்னதாக   சினார்   ஹரியான்  கூறிற்று.