ஜாலான் அலோர் வணிகர்களும் அங்காடி வியாபாரிகளும் அங்கு சுற்றுப்பயணிகள் அதிகம் வருவதைப் பயன்படுத்திக் கொண்டு பொருள் விலைகளை உயர்த்தக் கூடாது.
அப்படிச் செய்தால் பெட்டாலிங் ஸ்திரிட் நிலைதான் அதற்கும் நேரும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். பெட்டாலிங் ஸ்திரிட்டுக்குச் சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்து கொண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“வியாபாரிகள் சுற்றுப்பயணிகளைப் பயன்படுத்திக் கொண்டு பொருள் விலைகளைக் காரணமில்லாமல் உயர்த்த மாட்டார்கள் என நம்புகிறேன். நாட்டின் நற்பெயரையும் ஜாலான் அலோரின் பெயரையும் காப்பதற்கு அது அவசியம்.
“சுற்றுப்பயணிகள் திரும்பவும் வர வேண்டும். நாடு திரும்பிச் செல்லும் அவர்களே நம் நாட்டின் குட்டித் தூதர்கள்”, என்றாரவர். தெங்கு அட்னான் நேற்றிரவு கூட்டரசுப் பிரதேச புக்கிட் பிந்தாங் விழாவைவைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்
ஜாலான் அலோர் வியாபாரிகள் ப்ருட்களின் விலைகளை உயர்த்தக் கூடாது என்றால் ஜாலான் பாரிட் வியாபாரிகள் உயர்த்தலாமா?
ஆமாம்! பெட்ரோலை மட்டும் நாங்கள் உயர்த்துவோம்!
முதலில் உங்கள் நிலையை புரிந்து பேசுங்கள். விலை உயர்வுக்கு நீங்கள்தானே பொறுப்பு. மாதந்தோறும் எரிவாயு விலையை உயர்த்துவது தான் பொருட்களின் உயர்வுக்கு அஸ்திவாரம். மக்கள் திண்டாட்டம் உங்கள் தலைகள் கொண்டாட்டம்.
இந்த நாதாரிக்கு சூடு சொரணை கிடையாது– தான் செய்வது தான் மிகவும் சரியானது என்று மனக்கணக்கு– தலையை மண்ணில் புதைத்து கனவு காணும் ஈனம்