பாஸ் கட்சி பக்கத்தான் ஹராபானை உடைக்க முயல்வதாக பார்டி அமனா நெகாரா (அமனா) குற்றம் சாட்டியுள்ளது.
எதிரணிக் கூட்டணி உடைந்தால் அம்னோவுக்கும் பிஎன்னுக்கும்தான் கொண்டாட்டம் என்கிறார் அமனா தொடர்புப் பிரிவு இயக்குனர் காலிட் சமட்.
“பாஸ் அதன் ஆட்டத்தைத் தொடங்கி விட்டது…….பக்கத்தான் ஹரபானை உடைப்பதுதான் அதன் நோக்கம்………எதிரணி பிளவுபடுவதுதான் அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் முக்கியம்”, என்றவர் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, பிகேஆரும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வும் ஹரபானை விட்டு வெளியேறி பாஸ் தலைமையில் செயல்படும் ககாசான் செஜாத்ராவில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது ஷா ஆலம் எம்பியான காலிட் அவ்வாறு கூறினார்.
ஒட்டுப் போடுற எங்களுக்கு தெரியாத யாருக்கும் போடா வேண்டும் என்று.
எங்களுக்கு என்ன குறையென்றால் சடட மன்றத்திற்கு ஐ.சே.கா வும்.நாடாளும் மன்றத்திற்கு இந்த கேணப் பய பாஸ் வேட்பாளராக வருவான். என்ன செய்ய ????