ராம்கோபால்: பினாங்கில் மலாய்க்காரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? அட்னான் போலீசிடம் விளக்க வேண்டியிருக்கும்

ramகூட்டரசுப்   பிரதேச    அமைச்சர்     தெங்கு    அட்னான்    தெங்கு   மன்சூர்     பினாங்கில்  மலாய்க்காரர்கள்  புறக்கணிக்கப்படுவதாககக்  கூறியது   குறித்து   போலீசிடம்   விளக்கமளிக்க    வேண்டியிருக்கும்  என   டிஏபி   எம்பி   கூறினார்.

அதன்  தொடர்பில்   போலீசில்   புகார்   செய்த  பின்னர்   புக்கிட்   குளுகோர்   எம்பி   ராம்கர்பால்   சிங்   செய்தியாளர்களிடம்    பேசினார்.

“அவர் (தெங்கு   அட்னான்) சொன்னதை   மீட்டுக்கொள்வார்    எனத்   தெரியவில்லை.  48மணி  நேரம்   என்பது   ஒரு  நீண்ட    அவகாசம்.

“இனி  அவர்   போலீசிடம்தான்   விளக்க   வேண்டும்.  எங்கள்  பங்குக்கு    போலீசில்  புகார்   செய்து   விட்டோம்”,  என  ராம்கர்பால்   கூறினார்.

தெங்கு  அட்னானின்   கூற்று   பொறுப்பற்றது,  குறும்புத்தனமானது    என்று   வருணித்த   ராம்கர்பால்,   அது  தேச   நிந்தனைக்குரியதா,    இனங்களுக்கிடையில்   கலகத்தை   உண்டு   பண்ணக்கூடியதா    என   போலீஸ்  பல   கோணங்களில்    ஆராய   வேண்டும்     என்று   கேட்டுக்கொண்டார்.