எப்ஏஎம் தலைவர் பதவிக்குப் போட்டியிட பட்டத்திளவரசருக்கு சுல்தான் அனுமதி

famஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்   இப்ராகிம்   சுல்தான்  இஸ்கண்டர்,  மலேசிய   கால்பந்து   சங்கத்   தலைவர்   பதவிக்கு   தம்   புதல்வரும்   பட்டத்திளவரசருமான   துங்கு  இஸ்மாயில்   சுல்தான்   இப்ராகிம்  போட்டியிட   இசைவு   கொடுத்தார்.

முன்னதாக   ஏழு   மாநிலங்களின்  கால்பந்து   சங்கக்   குழுக்கள்  சுல்தானைச்   சந்தித்து    அனுமதி    அளிக்குமாறு   வேண்டிக்கொண்டனர்.

அவர்களின்   வேண்டுகோளை   ஏற்ற   சுல்தான்,   எப்ஏஎம்    தலைவர்   போட்டிக்குப்   போட்டியிட்டு   “மலேசிய   கால்பந்தாட்டத்தை  மாற்றி  அமைக்குமாறு”   பட்டத்திளவரசரைப்   பணித்தார்.

இதனிடையே,   கால்பந்து    சங்கப்   பேராளர்களின்   பேச்சாளரான    மலாக்கா    கால்பந்து   சங்கத்   துணைத்    தலைவர்    முகம்மட்  யூசுப்   மகாதி,   சுல்தான்   அனுமதி   அளிக்குமுன்னர்    கால்பந்து     சங்க    உறுப்பினர்கள்     பட்டத்திளவரசருக்கு   ஆதரவாக   இருப்பதை     மறுஉறுதிப்படுத்திக்கொள்ள  விரும்பினார்   என்றார்.

எப்ஏஎம்   அதன்   தேர்தலை   அடுத்த   மாதம்   நடத்தத்   திட்டமிட்டுள்ளது.

2014ஆம்   ஆண்டும்   துங்கு   இஸ்மாயில்   எப்ஏஎம்   தலைவர்   பதவிக்குப்  போட்டியிட்டார்.  ஆனால்,  அப்போட்டியில்   பகாங்   பட்டத்திளவரசர்    தெங்கு  அப்துல்லா   சுல்தான்   அஹ்மட்  ஷா    27   வாக்குகள்  பெற்று   வெற்றி   பெற்றார்.  துங்கு   இஸ்மாயிலுக்கு  12   வாக்குகள்தான்  கிடைத்தன.