முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் டிஏபியில் சேர்ந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“டிஏபியில் சேர்ந்ததைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”, என சிலாங்கூர் ட்ரோபிகானா கோல்ப், கண்ட்ரி ரிசோர்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜைட் கூறினார்.
அப்போது டிஏபி இடைக்காலத் தலைவர் டான் கொக் வாய், அதன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆகியோரும் அவருடன் இருந்தனர்.
டிஏபி பொறுப்புடைமை, நேர்மை ஆகிய கொள்கைகளைக் கொண்ட கட்சி என்பதால் அதில் சேர்ந்ததாக ஜைட் கூறினார்.
திறமையாக ஆட்சி நடத்த முடியும் என்பதை அது நிரூபித்துள்ளது, அக்கட்சியால் நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.
டி.எ.பியைசிறுமைப்படுத்தும்அமினாவுக்கு
வாய்ப்பூட்டு போட்டுள்ளது.ஆனாலும்
டிஎபியில்நீடிப்பாரா ஜைட் இப்ராகிம்.எதோ
ஒரு கணக்கு போட்டுள்ளார்.
நடக்காதுஎன்பார் நடந்துவிடும் …..