முப்தி செய்தி தொடர்பில் மன்னிப்பு கேட்க பிஎச்-சுக்கும் என்எஸ்டிக்கும் 48மணி நேரக் கெடு விதித்தார் குவான் எங்

limபினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்,  பெரித்தா   ஹரியானுக்கும்   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்சுக்கும்   அவை   மாநில   முப்தி   நியமனம்   தொடர்பில்   வெளியிட்ட   செய்திகளை    மீட்டுக்கொண்டு   மன்னிப்பு    கேட்க   48மணி  நேர   அவகாசம்   கொடுத்திருக்கிறார்.

பினாங்கு    பாஸ்    இளைஞர்    தலைவர்    அப்னான்   ஹமிமியை   மேற்கோள்காட்டி      அந்நாளேடுகள்   வெளியிட்ட    செய்திகள்   முப்தியின்   நியமனத்தில்   லிம்மின்   “அரசியல்   தலையீடு”   இருந்ததாகக்  குற்றம்    சாட்டியிருந்தன.

முப்தி   நியமனத்தில்    தாம்   தலையிட்டதாகக்   கூறப்படுவதை  மறுத்த     லிம்,  அப்பதவியில்   யாரை   அமர்த்தலாம்     எனப்   பரிந்துரைத்தவர்  மாநில   இஸ்லாமிய   விவகாரங்களுக்குப்   பொறுப்பான    ஆட்சிகுழு   உறுப்பினர்   அப்துல்   மாலிக்  காசிம்   என்றார்.

அப்பரிந்துரையை   பிகேஆர்    நடப்பில்   தலைவரும்    முன்னாள்   பெர்மாத்தாங்  பாவ்   எம்பியுமான   அன்வார்  இப்ராகிமும்   ஏற்றுக்கொண்டார்    என்றாரவர்.

“அவ்விரு  நாளேடுகளும்   எனக்கெதிராக   அவதூறான   செய்திகளை   வெளியிட்டிருப்பதால்  48மணி  நேரத்துக்குள்  பகிரங்கமாக   மன்னிப்பு    கேட்க   வேண்டும்”,  என  லிம்   கூறினார்.