பாலியல் குற்றங்களுக்காகவும் வேறு பல குற்றங்களுக்காகவும் கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த செல்வகுமார் சுப்பையா இன்று காலை 7.30க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தார்.
56வயது நிரம்பிய அவரை கனடா போலீஸ் அதிகாரிகள் அழைத்து வந்ததாக செல்வா குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக ஃப்ரி மலேசியா டூடே கூறிற்று.
செல்வா, எதிர்பார்த்ததுபோல் பினாங்கு செல்ல மாட்டாராம், கோலாலும்பூரில்தான் இருப்பாராம். இதையும் அவ்வட்டாரம்தான் தெரிவித்தது.
இதனிடையே, செல்வாவைச் சந்திக்க சுமார் 20 செய்தியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர் என்றும் ஆனால், அவர் வேறு வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாகவும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைமஸ் தெரிவித்தது.
இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அவருள் மனா மாற்றத்தை
ஏற்படுத்தியிருக்கலாம் ! எனவே அவர் மீண்டும் சமூகத்தோடு இணைந்து வாழ ஒரு வாய்ப்பை வழங்குவோம் !!!
என்னவோ மேள தாளத்தோடு வரவேற்கப்பட வேண்டியவர் போல இந்தப் பத்திரிகைகள் செய்திகளை போடுகின்றன! காவல்துறையும் என்ன செய்வது என்று தெரியாமல் தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறது!