நாட்டில் ஊழல் விவகாரங்களை விசாரணை செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதை மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் பெர்காசா வரவேற்கிறது.
பூமிபுத்ரா மலேசியா பைனான்ஸ் (பிஎம்எப்), 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேசனல், சட்டத்துக்குப் புறம்பாக மரங்களை வெட்டுதல், அரசாங்கத் துறைகள், அரசுதொடர்பு நிறுவனங்கள் முதலியவற்றில் ஊழல்கள் குறித்து ஆராய வேண்டும் என பெர்காசா நேர்மை மற்றும் ஊழல்தடுப்புப் பிரிவுத் தலைவர் ஷகிரான் சப்வான் ச்சே முகம்மட் அஸ்மாரி கூறினார்.
“ஆர்சிஐ அமைக்கப்படுவது அப்படிப்பட்ட விவகாரங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும்.
“மேலும், ஊழல் காரணமாகக் களங்கப்படுத்தப்பட்டவர்கள் களங்கத்தைப் போக்கிக் கொள்ளவும் அது உதவும்”, என்றாரவர்.