இந்தோனேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (கேபிகே), இந்தோனேசிய தூதரக அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளது.
நேற்று கோலாலும்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட அவ்வதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்க விரைவில் ஜாகார்த்தா கொண்டு செல்லப்படுவார் என கேபிகே பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஃபெப்ரி தியான்ஷா இன்று கூறினார்.
அவ்வாணையம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் சில மாதங்களாக அவ்வதிகாரியின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்ததாக ஃபெப்ரியை மேற்கோள்காட்டி இணையத்தள ஊடகமொன்று கூறிற்று.
கேபிகே, ஜாகார்த்தா அருகில் உள்ள அந்த அதிகாரியின் வீட்டிலும் அதிரடிச் சோதனை நடத்தியது. அதில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாகவும் அவர் சொன்னார்.
-பெர்னாமா