ஐஜிபி: செல்வா போலீசுடன் ஒத்துழைப்பார்

igpபாலியல்  குற்றங்களுக்காகவும்   வேறு   பல    குற்றங்களுக்காகவும்  கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை   அனுபவித்து  விட்டு     மலேசியா    திரும்பிய    எஸ்.  செல்வகுமார்  குறித்து   பொதுமக்கள்   கவலை   கொள்ள   வேண்டியதில்லை  என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு  பக்கார்    கூறினார்.

செல்வா   போகுமிடங்கள்   குறித்து   தகவல்   தெரிவித்து   போலீஸ்   அவரைக்   கண்காணிப்பதற்கு    உதவுவார்  என்றாரவர்.

செல்வா,   செய்த   குற்றங்களுக்குத்   தண்டனை    அனுபவித்து    விட்டார்    என்பதால்    அவருக்கு   எதிராக    எந்தச்   சட்டத்தையும்   பயன்படுத்த   முடியாது   என்று  கூறிய   காலிட்,  அவர்  சுதந்திரமாக     நடமாடலாம்    என்றார்.

“கிள்ளான்  பள்ளத்தாக்கில்    இருக்க    அவர்   முடிவு   செய்துள்ளார்.  தம்   நடமாட்டம்   குறித்து     தெரிவித்து   போலீசுடன்   ஒத்துழைக்கத்   தயாராக    உள்ளார்.

“பொதுமக்களுக்குக்   கவலை   வேண்டாம்”,  என்று   போலீஸ்    தலைவர்   தெரிவித்ததாக   உத்துசான்   மலேசியா   கூறியது.

56-வயதான  செல்வா   நேற்று    நாடு   திரும்பினார். அவர்   தீவகற்ப   மலேசியாவில்  தடையின்றி   சுதந்திரமாக    நடமாடலாம்.   ஆனால்,   சாபா,  சரவாக்    செல்ல   முடியாது.   தனிக்  குடிநுழைவுச்   சட்டங்களைக்  கொண்டுள்ள  அவ்விரு   மாநிலங்களும்    அவருக்குத்   தடை  விதித்துள்ளன.