பத்துமலைக் கடைகளை மலாய்க்காரர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளவில்லை, கோயில் அறங்காவலர் கூறுகிறார்

 

Batucaves3பத்துமலை வளாகத்திலுள்ள கடைகளை மலாய்க்காரர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளை கோயில் அறங்காவலர் என். சிவகுமார் மறுத்தார்.

“நாங்கள் யாரையும் தடுத்துநிறுத்துவதில்லை, அதனால்தான் நாம் 1மலேசியா என்கிறோம்”, என்று சிவகுமார் மலேசியாகினிக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

“அமைக்கப்பட்ட 350 கடைகளில் 70 விழுக்காடு கடைகள் இந்தியர்களுக்கு சொந்தம்”, என்றாரவர்.

மலேசியாகினி மேற்கொண்ட ஒரு சோதனையில் கிட்டத்தட்ட அனைத்துக் கடைகளும் இந்தியர்கள் வசம் இருப்பது தெரிய வந்தது..

ஒரு வழிபாட்டுத்தலமாகக் கருதப்படும் இடத்தில் கேளிக்கை சந்தை இருக்கிறதே என்று கேட்டதற்கு, “நாம் இருக்கும் இந்த இடத்தில் அதிகமான சுற்றுப்பயணிகள் மற்றும் இதர மக்கள் ஆகியோருடன் இணங்கிப் போகவேண்டி இருக்கிறது. இங்கு சூதாட்டம் போன்றவை இல்லை என்று சிவகுமார் கூறினார்.

கைலிக்கு ரிம5 வாடகை

கோயிலுக்குள் நுழையும் பெண்கள் அவர்களின் முழங்கால் தெரிய உடை அணிந்திருந்தால் ஒரு கைலியை வாடகைக்கு எடுக்க வேண்டும்batucaves2 அல்லது வீட்டிற்குப் போக வேண்டும் என்பது நடைமுறையில் இருப்பது பல சுற்றுப்பயணிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. இது ஒரு முழுமையான ஏமாற்று வேலை என்று பலர் கூறினர்.

சில சுற்றுப்பயணிகளுடன் இது குறித்து கேட்ட போது இது போன்ற முறை பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் ரிம3 வாடகை ஒரு பெரிய ஏமாற்று வேலை என்றனர்.

சிவகுமார், இவர் கோயில் நிருவாகக் குழுவின் தலைவர் ஆர். நடராஜாவின் மகன், இவ்வளவு அதிகமான வாடகை விதிக்கும் கோயிலின் முடிவைத் தற்காத்து பேசினார். இதன் நோக்கம் இங்கு வருகிறவர்கள் முறையாக உடை அணிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் என்று மேலும் கூறினார்.