இஸ்லாமிய அரசியல் அதிகாரத்தை பலவீனப்படுத்தியவர் மகாதிர், பழிபோடுகிறார் ஹாடி

 

hadiஇஸ்லாமிய அரசியல் அதிகாரம் பலவீனமானதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் மீது பழிபோடுகிறார் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்.

நாட்டில் 65 விழுக்காட்டினர் முஸ்லிம்களாக இருந்தும் இது நடந்திருக்கிறது. “இஸ்லாமிய அரசியல் அதிகாரம் மிகப் பலவீனமாக இருக்கிறது. இதற்கு காரணம் டாக்டர் மகாதிர் முகமட். அவர் பாஸை ஓரங்கட்டும் வியூகத்தை மேற்கொண்டார்”, என்று ஹாடி கூறினார்.

“இந்த வியூகம் அம்னோவுக்கும் பாஸுக்கும்கூட எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. இதை நாம் அனைவரும் திருத்தியமைக்க வேண்டும்”, என்று ஹாடி கடந்த வெள்ளிக்கிழமை மாராங்கில் நடந்த ஒரு செராமில் கூறியுள்ளார்.

இதன் வீடியோ பதிவு திராங்கானுகினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதின் வழி மகாதிர் இதனைச் செய்தார் என்று கூறிய ஹாடி, இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க அம்னோவும் பாஸும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.