தடுப்புக்காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரியை இடைநீக்கம் செய்ய சுவாராம் கோரிக்கை

copமலேசிய   மனித   உரிமைக்  கழகமான   சுவாராம்,     தடுப்புக்  காவலில்   அடிக்கடி   உயிரிழப்பு   நேர்வதை    எண்ணி  வருத்தமுறுகிறது.

இதை    இன்று   ஓர்     அறிக்கையில்    தெரிவித்த   அக்கழகம்,   புதன்கிழமை   வட  கிள்ளான்   போலீஸ்    தலைமையகத்தில்    மரணமடைந்த   எஸ்.பாலமுருகனின்   வழக்கில்   சம்பந்தப்பட்ட   விசாரணை  அதிகாரி(ஐஓ)யை    பதவி  இடைநீக்கம்   செய்ய   வேண்டும்   என்றது.

“தடுப்புக்  காவலில்   மேலும்   ஒரு  மரணம்   நிகழ்ந்துள்ளது.  எஸ். பாலமுருகனின்  குடும்பத்தார்   அவர்   செவ்வாய்க்கிழமை   நீதிமன்றம்   கொண்டு  செல்லப்பட்டபோது   இரத்த   வாந்தி    எடுத்ததாகவும்   ஆனால்,   அவருக்கு  மருத்துவ   சிகிக்கை   அளிக்காமலேயே   காவல்    நிலையத்துக்குத்     திரும்பக்   கொண்டு   சென்று   விட்டார்கள்   எனவும்    முறையிட்டிருக்கிறார்கள்.

“இறந்து  போன   அவரது   உடலில்  காயங்களும், கீறல்களும்   இருந்ததை   அவரின்   குடும்பத்தார்   கண்டிருக்கிறார்கள்”,   என்று   அவ்வறிக்கை
கூறிற்று.

நடந்துள்ள   சம்பவதைக்  கடுமையாகக்  கருதி    விசாரணை   செய்த   அதிகாரி   இடைநீக்கம்   செய்யப்பட   வேண்டும்  என்றும்   மரண  விசாரணை   நடத்தப்பட   வேண்டும்   என்றும்   சுவாராம்   வலியுறுத்தியது.