முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், பார்டி செஜாத்ராஆன் இன்சான் தானா ஆயர்(கித்தா) அமைத்ததுதான் தான் செய்த தவறு, அதுவும் ஒரே தவறு என்பதை ஒப்புக்கொள்கிறார்.
நிதியியல் இணையத்தளமான iMoney-க்கு நேர்காணல் வழங்கிய அவரிடம் , பிகேஆரிலிருந்து விலகியதும் அவர் பார்டி கித்தா அமைக்க முடிவெடுத்தது குறித்து வினவப்பட்டது.
“அது அறிவார்ந்த முடிவல்ல. அதுதான் நான் செய்த ஒரே தவறு.
“கித்தா மிகுந்த செலவை வைத்து விட்டது. நடத்துவதற்கும் சிரமமாக இருந்தது.
“நண்பர்கள்- வசதியானவர்கள்- உதவுவார்கள் என்று அப்பாவித்தனமாக நம்பினேன். அப்படி எதுவும் நடக்கவில்லை”, என ஜைட் கூறினார்.
இனிமேல் பல தவறுகளை செய்யப்போகிறாய் !
பாதிவழியில் காலை வாராமல் இருந்தால் சரி– முன்பு ஒருவான் DAP ல் சேர்ந்து பிறகு காலை வாரினான். இந்த நாட்டுக்கு இன வெறி இல்லாமல் யாவரும் மலேசியர்கள் என்று அரசியலை நடத்த உன் -கடந்த அம்னோ நாதாரிகளுக்கு தெரியப்படுத்து. ஆனாலும் அந்த நாதாரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டாங்கள் — இன வெறி ஏற்றி விட்டால்தானே சுலபமாக அதில் குளிர் காயலாம்?
தவறுகளை தைரியமாக ஒப்புக்கொள்வதும் அதை திருத்திக் கொள்வதும்தான் வெற்றிக்கான சிறந்த வழிகள் ! என்ற தத்துவத்தை
உணர்ந்த மனிதர்.