பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆற்றிய உரை உணர்ச்சியைத் தூண்டுவதாக இருந்தது என மஇகா தலைவர் சாடினார்.
நேற்று பினாங்கு தண்ணீர்மலை கோயிலுக்குச் சென்றபோது அவரது உரையைக் கேட்க நேரிட்டது என சுப்ரமணியம் கூறினார்.
“நான் பினாங்கு தண்ணீர்மலை கோயில் வளாகத்தினுள் நுழைந்ததும் இனிமையான சமயப் பாட்டுக்களோ, பாசுரங்களோ என்னை வரவேற்கவில்லை, பினாங்கு முதல்வரும் துணை முதலமைச்சரும் ஆற்றிய சினமூட்டும் அரசியல் பேச்சுகள்தான் வரவேற்றன”, என சுப்ரமணியம் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
தைப்பூசம் ஒரு சமய விழா என்று குறிப்பிட்ட சுப்ரமணியம் அங்கு ஆன்மிகத்துக்கு மட்டுமே இடமுண்டு என்றும் வலியுறுத்தினார்.
லிம்மும் அவரது முகநூலில் சுப்ரமணியத்தை ஆலயத்தில் சந்தித்தது குறித்து எழுதியிருந்தார். சுகாதார அமைச்சரைச் சந்தித்தது “இனிமை கலந்த ஆச்சரியம்” என்று கூறிய, இருவரும் தேநீர் அருந்திக் கொண்டே உரையாடியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சுப்ரா அவர்களே, லிம் அவர்களின் உரை உணர்ச்சியைத் ‘தூண்டியதாக சொல்லும் அதேவேளை எப்படி அவருடன் அமர்ந்து தேநிர் அருந்தினீர்கள்? இரண்டும் வெவ்வேறு சமய சந்தர்ப்பத்திலா? அல்லது பினாங்கு தைப்பூச சந்தர்ப்பத்திலா?
சினமூட்டும் பேச்சு என்கிறீர்கள்; உணர்ச்சியைத் தூண்டுவதாகவுள்ளது என்கிறீர்கள்; தெளிவாகச் சொன்னால்தான் மக்களுக்குப் புரியும். கடந்தக் காலங்களிலும், இப்போதும் சரி, உரிமைப் போராட்டங்களில் மற்றவர்களால் நம்மவர்கள் சந்தித்த, சந்திக்கின்ற பிரச்சனைகள் என்னிலடங்கா! அப்போதெல்லாம் நீங்கள் யாரையும் சாடவில்லையே!
மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகளை பற்றி உங்களுக்குத்தான் பேசவராதே ! அவர்பேசட்டுமே !!
ஆகா மொத்தத்தில் தமிழர்கள் / இந்தியர்கள் எழுந்து விட கூடாது. மா இ கா அடக்கி ஆழனும்! அப்படி என்றால் கடந்த காலங்களில் நீங்கள் பத்து மலையில் என்ன மணி ஆட்டி கொண்டு இருந்தீர்களா ?
ம .இ . கா கரனுக்குத்தான் சூடு சொரணை கிடையாது ! தமிழனுக்கு தான் யார் , இந்த நமது சொந்த மண்ணில் எப்படி வாழவேண்டும் , வளம் பெற வேண்டும் என்று சீநன் னாவது நமக்கு உணர்ச்சியை தூண்டி உறைக்கும்படி சொல்லட்டுமே .
சுப்ரா பேச்சில் எப்போதுதான் உண்மை இருக்குமோ தெரியவில்லை . மானமுள்ள மனிதராக இருந்தால் லிம் அப்படி தவறாக பேசியதை கண்டித்திருக்க வேண்டும் அப்போதே. அதை விடுத்து அவருடன் அமர்ந்து தேநீர் அருந்தி விட்டு இப்போது கூஜா தூக்கிகள் கொஞ்ச வேண்டும் என்பதற்காக அறிக்கை விடுவது வீண் .
அந்த மணியை (?) சுத்தப்படுத்தி கொண்டிருந்தார்.
துயூ து …………
பினாங்கு முதலமைச்சர் உணர்ச்சியை தூண்டினார் என்றால் அவர் என்ன லேகியமாய் விற்கிறார்.
பினாங்கு தைப்பூசத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் ,காரியங்கள் கண்ணெதிரே இருந்தும் , காமாலைக்கண் நெஞ்சம் கொண்ட சுப்ரா வாழ்க ,வாழ்கவே ====
“பினாங்கு முதலமைச்சர் உணர்ச்சியை தூண்டினார் என்றால் அவர் என்ன லேகியமாய் விற்கிறார் ? ” என்று மு.சுகுமாரன் கேட்க்கிறார். அப்படி எதையாவது வாங்கி திண்ணாவது உணர்ச்சி வரட்டுமே இந்த சுப்ராவுக்கு ….