மஇகா தலைவர் டாக்டர் எம்.சுப்ரமணியம்தான் சமயத்தில் அரசியலைக் கலப்பதாக பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி சாடியுள்ளார்.
ஆன்மிகம் பேசும் சுப்ரமணியம் அதைப் பின்பற்றவில்லை என்று இராமசாமி விளாசினார்.
“இந்தியர்களைக் கைவிட்டு வெளிநாட்டவரான செட்டியார்களை ஆதரிக்கும் அவர் எந்த ஆன்மிகத்தைப் பற்றிப் பேசுகிறார்?”, என இராமசாமி வினவினார்.
“உண்மையான தலைவராக இருந்தால் தண்ணீர்மலை மலைக் கோயிலுக்கும் அவர் வந்திருக்கலாம். அங்கு இந்தியர்கள் பெருந் திரளாகக் கூடியிருந்தனர்; இரண்டுக்குமே அவர் சென்றிருக்கலாம்”, என்று மலேசியாகினியிடம் கூறினார்.
“செட்டியார் கோயிலுக்கு மட்டுமே சென்று வெள்ளி இரதத்தைத் தற்காத்துப் பேசிய அவர்தான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறார்”, என்றாரவர்.
பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சினமூட்டும் வகையில் பேசினார் என்று சுப்ரமணியம் முகநூலில் பதிவிட்டிருப்பதற்கு இராமசாமி இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்!
வழக்கத்திற்கு மாறாக என்று தைப்பூசத் திருநாளில் இரண்டு தங்க ரதங்கள் ஓட ஆரம்பித்ததோ, சாதி பிரச்சனை தேவையில்லாமல் உருவாக்கப் பட்டதோ, அன்றையலிருந்து நம்மவர்கள் நடத்தும் அரசியலைப் பற்றிய நல்ல எண்ணத்தையும் மாற்றிக் கொண்டு விட்டேன்! வெளிப் படையாக திறந்த மனதோடு சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை; அரசியலில் இப்போது யாரையும் நம்புவதற்கில்லை; அரசியல் எங்குதான் கலக்கப் பட வில்லை! இனிமேலாவது நம்மை நாம் நல்லப் படியாக மாற்றிக் கொள்வது நன்று.
நீங்கள் சொல்வதும் உண்மைதான் பேராசிரியரே..ஆனாலும் நீங்களும் கொஞ்சம் அடக்கி வாசிப்பது உங்கள் பதவிக்கு நல்லது.
சரி! செட்டியார்களை ஓரங்கட்டினீர்கள். யாழ்ப்பாணத் தமிழர்களை அப்படி செய்ய முடியுமா?
பொதுப்பிரச்சனை பொதுவாக தீர்க்கப்பட வேண்டும். ஆனால் MIC ஒழுங்காக செயல் பட்டிருந்தால் எவ்வளவோ பிரச்சனைகள் நமக்கு வந்திருக்காது. என்ன சொல்லி என்ன பலன்? எங்கு பகுத்தறிவுக்கு இடமில்லையே அங்கு தீர்வு கடினமே.
செட்டியார்கள் வெளிநாட்டவர்கள் என்று திராவிடிய ராமசாமி காட்டிக்கொடுக்கிறாப்பில ! சாதி ஒழிப்புப்போராளி ராமசாமி சாதியை வைத்து அரசியல்!!
அரைகுறை தமிழ்கற்ற மாடாசாமியே திரிவடுக கலப்பினால் பெரும்பாலான ஆலயங்களில் தமிழர் வழிபாடு முற்றிலும் அந்நியப்பட்டு உள்ளதை அறிவீரா ? தங்கத்தமிழ் வழிபாட்டுமுறை சிறியளவிலாவது இன்றும் உள்ளதென்றால் நீர் கூறும் செட்டியார்சாதிகளின் கட்டுபாட்டிலுள்ள ஆலயங்களில் மட்டுமேதான் ..
செட்டியார்களுக்கு வெள்ளிமுலாம் –அதெப்படி செட்டியார்களை மீறி தமிழர்கள் தங்கமுலாம் பூசுவது –மாபெரும் குற்றமாச்சே – தமிழர்கள் இன்னும் ஏன் முட்டாளாகவே இல்லை – தப்பாச்சே . தமிழன்டா – நான் தமிழன்டா –பெருமையாக இருக்கிறது . செட்டியார்கள் நான் தமிழன் என்று சொல்வானா .? பெரும்பான்மை அடங்கி கிடக்கனுமா ?
நாட்டுகோட்டை செட்டியார்கள் தமிழர்கள்தான் ..தெலுங்கர்களும் மலையாளிகளாக வேசம்போட்டு வாழும் சில தெலுங்கர்களும் தாங்களும் செட்டியார்களே என்று சொல்லி தமிழ் இனகுழுக்களை சிதைத்து வருவதை அறிவாந்த தமிழர்கள் அறியாமல் இல்லை ..
நாட்டுகோட்டை நகரத்தார்களை இதர தமிழ் குடிகளிடமிருந்து அன்னியபடுத்தி வேற்று இனத்தவர்கள்போல கட்டமைத்தால்தான் தங்களின் இனமறைப்பு பருப்புவேகும் என்பதில் தெளிவாக உள்ளனர் …இந்த ஊடுருவல் தேவாங்கு செட்டிகளால் பருமாவில் செல்வசெளிப்போடு வாழ்ந்த நகரத்தார் சொத்துகளை இழந்து நிர்கதியானகதை பலருக்கு தெரியாது
செட்டியார்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களின் தாய் மொழி என்ன?
திருவாளர்கள் இராமசாமியும், சுப்ரமனியமும் தமிழர்களை குழப்புகிறார்கள் ! இவர்களிருவரும் , மற்றும் செட்டியார்களும் வழிபடும் முருகன் கூட ” ஏண்டா இப்படி மோதிக்கொள்கிறீர்கள்
சமதானமாக போங்கள் ” என்று அறிவுரை கூறாமல் “கம்மென்று ”
இருக்கிறார். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகென்ன ! குமரனுக்கும் கொண்டாட்டமோ , என்னவோ !
தமிழர் எழுச்சிபறை நீங்கள் என்ன தான் சொல்லவறீர்கள் ?
1. தைபூசத் திருநாளில் இம்மாநில முதல்வர் நம்மை சிறுபான்மை இனமாக அடையாளம் காட்டியது வருத்தத்திற்க்குறியச் செயல்; நாம் இந்நாட்டில் சிறிய இனமென்பதை மட்டும் ஒப்புக் கொள்கின்றேன்; நம் நாட்டிற்கு அன்று சுதந்திரம் வேண்டப்பட்டப் போது ஆங்கிலேயர்கள் “இந்தியர்களும்” என்றுதான் நம்மை அடையாளம் காட்டினார்கள்; நாம் சுதந்திரம் பெற்றதும் இந்த உண்மை வரலாற்றின் அடிப்படையில்தான்; ஆனால் இப்போது வரலாற்றையும் மாற்றிவிட்டோம்; மற்றவர்கள் மாற்றுவதற்கும் இடம் கொடுத்து விட்டோம்; 2. ஆனால் கடந்தக் காலங்களிலும் இன்றும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் நம்மை இப்படி அடிக்கடி தேவையில்லாமல் அடையாளம் காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது; அன்றும் இன்றும் மஇக வினர் தங்களின் அரசியல் சுயநலத்திற்காகவும் லாபத்திற்காகவும் இப்படி மாறி மாறி நம் மேல் இந்த முத்திரையை தொடர்ந்தார்ப் போல் குத்திக் குத்தி, இன்று இந்த நிலைமைக்கு நம்மை கேவலப் படுத்திவிட்டார்கள் ; கொண்டும் வந்து விட்டார்கள்; தேசத் தந்தை சுதந்திரத் தந்தையென்று போற்றப் படுகின்ற துங்கு அவரகள் காலத்திலும் இந்த அடையாளம் நமக்க்கில்லை; நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னிருந்த 11 பேர்கள் கொண்ட அமைச்சரவையில் இரண்டு மந்திரிகள் அவர் நியமித்தது நம்மில் பலருக்குத் தெரியாது; அப்போது அந்த அளவிற்கு நமக்கு மரியாதை இருந்தது; ஆனால் இப்போதென்ன! அடுத்து இனிமேல் இந்த அடையாளத்தை மாற்ற நாம் என்னச் செய்யலாமென்பதுதான்; செய்வோம்!
அன்று நாம் சம பங்காளிகள் -மூன்று இனங்களும்– அதெல்லாம் மாறியபோது வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருந்த MIC ஈனங்கள் காக்காத்திமிருடன் அய்யாசாமி சேர்ந்து நம்மை எவ்வளவுக்கு கீழேதள்ளி மிதிக்கமுடியுமோ அவ்வளவும் நடந்தது. இன்று அதுவே நம்முடைய நிலையாகி விட்டது. நம்மில் பெரும்பாலோருக்கு இந்த உண்மை கூட தெரியாமல் தலையை மண்ணில் புதைத்து வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
பினாங்கில் சாதித்து விட்டான் தமிழன் ! பிரமாதம் செட்டியார்களுக்கு ஒரு தேர் , சாதாரண தமிழனுக்கு ஒரு தேர் ! இனி நாட்டில் இந்த பிரிவினை வேர் ஊன்ற போகிறது என்பதை மறந்து விட்டொம் ! தலை நகரிலும் பத்துமலை தைப்பூசத்திலும் இதையே செய்யலாமே ! ம .இ. கா. காரனுக்கு ஒரு தேர் , நடராஜ சார்பாக ! பக்கத்தானுக்கு ஒரு தேர் சேவியருக்காக ! அல்லது , யாழ்பாணத்தானுக்கு ஒரு தேர் ! கவுண்டனுக்கு ஒரு தேர் ! தெலுங்கனுக்கு ஒரு தேர் ! தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு ஒரு தேர் ! பல தேர்கள் ஓடினாள் நம் இனத்துக்கு தானே பெருமை ! அன்று இங்கு சஞ்சியில் வந்த தமிழன் படிப்பறிவில்லாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தான் ! அனால் இன்று படித்தும் முட்டாளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான் !
மணியம் அவர்களே, உங்கள் வாசகங்களை படிக்கும் போது கண்ணீர் வருவதுப் போல் தோன்றுகின்றது; ஒருத் தங்கத் தேர்; இன்னொரு வெள்ளிரதம். இதெல்லாம் நமக்கு தேவைதானா? இப்படியேப் போனால் நாளை எல்லாத் திருவிழாக் காலங்களிலும் எல்லா தெய்வங்களுக்கும் ஒவ்வொருத் தேராக ஒன்றன் பின் ஒன்றாக விட்டாலும் விடுவார்கள்; இவையெல்லாம் தங்களைத் தலைவர்களென்றெண்ணி செயல்படும் பொறுப்பற்றவர்களின் செயல்களையேக் காட்டுவதாகத் தெரிகின்றது. செட்டியார் சமுகம் ஒரு மரியாதைக்குரிய சமுகம். அந்த மரியாதையை நாம் அவர்களிடம் காட்டவில்லை. ஒருக் காலத்தில் இந்த நாட்டிலேயே வங்கிச் சேவையை அறிமுகப் படுத்தியவர்கள் அவர்கள்தான்; இனிமேலாவது நம்மை நாம் மாற்றிக் கொள்வோம்.
மலேசியாவில் நாம் தான் பிச்சைக்கார இனம்- என்னைப்பொறுத்த மட்டில் ஆண்டவன் தனக்கு தங்கத்தேர் தேவை என்று கேட்கவில்லை— அவனுக்கு இயற்கையான தேரே போதுமானதாக இருக்கும் -தமிழ் பள்ளிகளுக்கு அந்த தங்கம் உதவும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆணடவனுக்கு ஊழல் என்றுமே பிடிக்காது -அவன் பகுத்தறிவாளன். மனிதன் தான் ஊழல்வழி சாதிக்க முயற்சிப்பான். ஆண்டவனுக்கு நாம் அவனுக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டும் ஆனால் அவன் தனக்கு அளப்பான் என்று அவனுக்கு லஞ்சம் கொடுப்பது தவறு. அவனுக்கு எல்லாம் தெரியும் யார் நல்லவன் யார் ஊழல்வாதி என்று. என்ன செய்வது பெரும்பாலான நேரங்களில் பக்தி பகல் வேஷம் போடுதே? ஆனாலும் எனக்கு ஒரு உண்மை தெரியவேண்டும்– எவ்வளவு நல்லவனாக இருந்து நல்லது செய்தாலும் ஆண்டவன் அளப்பதில்லையே- கஷ்டம் தான் மிஞ்சுகிறது– அவனும் எதிர்பார்கிறானோ?
சாதனை புரிந்து விட்டதாக பெருமை பட்டுக்கொள்ளும் சில சுயநல அரசியல் வாதிகளின் செயல் பாடுகள் இவைகள் ! சாதனை என்ற பெயரில் இவர்கள் ஏற்படுத்தும் எதிர் மறை விளைவுகளை இவர்கள் சிந்திக்க வே இல்லை ! ஜாதி அடிப்படையில் இந்த சமுதாயம் பிரிந்து போனால் நமது ஒற்றுமையும் ! நமது பலமும் என்னாவது ! இன்று இரண்டு தேர்கள் ! நாளை இருபது தேர்கள் ! ஒரு ஜாதிக்கு ஒன்று என்று ! இந்த சமுதாயம் தோட்டங்களில் மாரியம்மனையும் ! காளியம்மனையும் ! வணங்கி கொண்டிருந்த போதே இவர்கள் நகரத்தார் என்று முருகனுக்கு நகரத்தில் ஆலையம் அமைத்தவர்கள் ! அதைபோல் ரயில்வே குர்ட்டர்ஸில் ஆலையம் அமைத்தவர்கள் யாழ்பாணத்தவர்கள் ! இந்தியர்கள் என்றுதான் ஒன்றுபடமுடியவில்லை ! இந்து என்ற அடிப்படையில் ஒன்று படலாமே! தேங்காய் உடைப்பவனுக்கும் குழப்பம் இருந்திருக்கும் ! தங்க தேருக்கு உடைப்பதா ! வெள்ளி தேருக்கு உடைப்பதா ! என்று !!
palanisamy அவர்களே ! s .maniam அவர்களின் எழுத்துக்களில் ஒரு விரக்தி தெரிகிறது !! இது அவருக்கு மட்டும் அல்ல, பொதுவாகவே நம் எல்லோரின் சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது . நமது அரசியல் வாதிகளின் போக்கை பார்த்தால் இவனுங்க திருந்தமாட்டானுங்க போலிருக்கு . தமிழ் நாளிதழ்களை பார்த்தால் ஒவ்வொரு நாளும் ” படிக்க பணமில்லாததால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை “, ” மேல் படிப்பை தொடர பணம் இல்லை “, ” தாயாருக்கு வந்த நோயை குணப்படுத்த வசதி இல்லை “, ” ஐந்து பிள்ளைகளோடு தனித்து வாழும் ஒரு தாயின் சோகம் “,” குடிசையில் ஒரு குடும்பம் ” இப்படியெல்லாம் செய்திகள் தமிழ் நாட்டு பத்திரிக்கையில் வருகிறது என்று எண்ணி விட வேண்டாம் , இந்த அவலமான செய்திகள் எல்லாம் நம் மலேசிய நாட்டு தமிழ் நாளிதழ்களை அலங்கரிக்கும் அன்றாட செய்திகள் . இப்போது சொல்லுங்கள் நமக்கு தங்க ரதம் ஒரு கேடா?
தங்க ரதம் வந்தது வருத்தமா ? இத்தனை வருடம் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே அனைத்து அதிகாரங்களையும் தம் வசம் வைத்து தைப்பூச வரவு வெளியே கசியாமல் கவனித்துக்கொன்டனரே அது தற்போது வெளியே வெளிச்சமாகிறதே அது வருத்தமா ?
பல தேர்கள் வெளிவருவதால் யாருக்கு என்ன கக்ஷ்டம் ? பலவித சாதிபிரிவினைகளே பெருமையாகக் கொண்டாடப்படும் இந்த இனத்தில் தேர் இரண்டுபடுவதால் மட்டும் இனமே அழிந்து போய்விடுவதைப்போல் புலம்புவது ஏன்? வசுல் பிரிவதனால் உண்டாகும் வருத்தமா இது ?
செட்டியார் சமூகம் மிகவும் மரியாதைக்குரிய சமூகம் உண்மைதான் , அதனால்தான் அவர்கள் தங்களை மட்டுமே உயர்வாய் எண்ணிக்கொள்கிறார்கள் , பெரும்பாலான செட்டியார் ஆலயங்களின் அவர்களின் சமூகம் தவிர்த்த பிறருக்கு இறைவனுக்குக் காட்டப்படும் கற்பூர ஆரத்தியைத தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ளும் உரிமை கூட அளிக்கப்படுவது இல்லை என்பது அவர்களின் உரிமையை இங்கே நிலை நாட்டப் பாடுபடும் சிலருக்கு தெரியாதோ ? சந்தேகமிருந்தால் இங்கே கூலிமில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு வந்து நேரிலேயே கண்டுகொள்ளவும்.
இறைவனுக்கு காணிக்கை செலுத்துகிறான் பக்தன், நிறைவேறிய தனது வேண்டுதலுக்கு நன்றிக்கடனைப் புலப்படுத்த அல்லது தனது பக்தியை வெளிப்படுத்த, இன்னும் சொல்லப்போனால் தான் செலுத்தும் காணிக்கை பல மடங்கு நன்மையாய் தனக்கே திரும்பிவரும் எனும் நம்பிக்கையில், அது இறைசேவைக்கு சமர்பிக்கப்படும் காணிக்கை, ஆனால் நடப்பதென்ன ? ஒரு சல்லிக்காசும் யாருடைய சுயநலத்திற்கும் உபயோகப்படுத்தாமல் அப்படியே இறைவன் அனுபவிக்கின்றானா ? அல்லது அவன் பெயரைச் சொல்லி சில இடைத்தரகர்கள் பயனடைகின்றனரா ? இந்துக்கள் கொஞ்சம் திருந்தினால் தேவலை. இந்த இடைத்தரகர்கள் பயனடைய ஏழை மக்கள் ஏன் தம்மிடமுள்ள கொஞ்ச நஞ்சத்தையும் இப்படி தாரைவார்க்க வேண்டும் ? என்று திருந்துவார்கள் இம்மக்கள். வெட்கம் !! வேதனை !! அவமானம் !! முருகா உன்னை நம்பும் இந்த ஏமாளிகளை நீயே விழிப்படையச் செய்வாயாக
எந்த ஒரு தலைவன் மூச்சுக்கு மூச்சு சாதியை பற்றி பேசுகிறானோ அவனுக்கு தமிழினத்தின் தலைவன் என கூறிக்கொள்ள தகுதியில்லை .அவன் இருக்கும் வரை, இறக்கும் வரை அவன் வாயிலிருந்துவரும் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தமிழினத்தின் ஒற்றுமையும் உயர்வும் மட்டுமே வெளிவரவேண்டும்.பிரபாகரனின் தம்பி என்று கூறிக்கொள்வதில் பொருளில்லை
இரண்டு தேர் தேவைதானா என்று கேள்வி கேட்பதற்கு முன் பினாங்கு இந்து அறவாரியம் என்ற பொது அமைப்பு உள்ளதே அதற்கு மரியாதை கொடுத்து அனைத்து ஆலயங்களையும் ஒருமைப்பாட்டுடன் நடத்துவதற்கு வழி விடலாம் அல்லவா?. ஏன் செட்டியார்கள் இத்தகைய ஒருமைப்பாட்டை பினாங்கு இந்து அறவாரியம் முன் வைத்த போது ஏற்கவில்லை? எல்லாம் சுயநலமும் தற்பெருமையும்தான் காரணம். இறை வழிபாட்டில் இப்படி தன்னலம் பேணி தற்பெருமை பேசும் மாக்களிடையே எந்த தெய்வமும் அண்டாது. இந்த உண்மையைப் புரிந்து அவரவர் வேலையைப் பாருங்கள். வெட்டிப் பேச்சுப் பேசியது போதும்.