தேசிய பத்திரிகையாளர் தினத்துக்கு ஊடகவியலாளர்கள் வரவேற்பு

pressமலேசியா   தேசிய  பத்திரிகையாளர் தினம்  ஒன்றைக்  கொண்டிருக்க    வேண்டும்   என்று  தொடர்பு, பல்லூடக   அமைச்சர்    சாலே சைட் குருவாக் முன்மொழிந்திருப்பதை   ஊடகவியலாளர்கள்   வரவேற்கின்றனர்.

மலேசிய   தேசிய   செய்தி நிறுவனமான   பெர்னாமாவின்   பொது   மேலாளர்  சுல்கிப்ளி சாலே,   அது    நடைமுறை   சாத்தியமான,      காலத்திற்கு   ஏற்ற  பரிந்துரை   என்று அவர் சொன்னார்.

தேசிய அளவில் நாட்டிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு   அங்கீகாரம்   கொடுப்பது    மிகவும்   பொருத்தமானதே   என்றாரவர்.

“அமைச்சரின்   பரிந்துரையை    வரவேற்கிறோம்.  அதை    நடைமுறைப்படுத்த    சம்பந்தப்பட்ட   தரப்புக்களுடன்     விவாதிப்போம்” என்று அவர்   இந்தோனேசியாவின்   அம்போனில்  பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இதனிடையே,  பெர்னாமாவின்   தலைமை   செய்தியாசிரியர்   ஜக்கரியா   அப்துல்   வகாப்,  அது   நீண்ட  காலமாக   எதிர்பார்க்கப்பட்ட   ஒரு    பரிந்துரை   என்று   சொன்னார்.

தேசிய    பத்திரிகை   ஊடகம்   நீண்டகாலமாக   சமயத்துக்காகவும்   இனத்துக்காகவும்     நாட்டுக்காகவும்   போராடி   வந்துள்ளன   என்றும்    காலனித்துவத்துக்கு    எதிராக   மக்களுக்கு   சுதந்திர   உணர்வை   “ஊட்டுவதில்”   முக்கிய   பங்காற்றி   வந்துள்ளன   என்றும்    அவர்   குறிப்பிட்டார்.