ஸைட் இப்ராகிம்: சொந்தக் கருத்துகள் கூறுவதை நான் நிறுத்த வேண்டியுள்ளது

 

ToceasepersonalinterviewsZaidமகாதிர் முகமட்தான் எதிரணியின் நடப்பில் தலைவர் என்று கூறியதற்காக கடுமையாகக் கடிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் இனிமேல் தமது சொந்தக் கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திகொள்ள வேண்டியுள்ளது என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் ஏளனத் தொனியுடன் தமது பதிலை டிவிட் செய்துள்ளார்.

மகாதிர் எதிரணியின் நடப்பில் தலைவர் என்று கூறப்படுவதை மறுத்த டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், அப்படியான ஓர் அரவமற்ற ஒப்பந்தம் ஏதும் இல்லை என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஸைட், எதிர்க்கட்சிக்கு தலைவர் இல்லை என்று மக்கள் கூறும்போது அதற்கு தாம் விளக்கம் அளித்ததாகக் கூறினார். மகாதிர்தான் மிகப் பெரிய தலைவர் என்று கூறும் நோக்கத்தைத் தாம் கொண்டிருக்கவே இல்லை என்றார்.

“ஓகே, அந்தத் தலைப்புப் பற்றி இதற்குமேல் எதுவும் இல்லை”, என்றார் ஸைட் இப்ராகிம்.