மலேசியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். சீனமொழியான மேன்டரினைக் கற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை பிரதமர் நஜிப் வலியுறுத்தினார்.
சீனா இன்று உலகளவில் ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. மேன்டரின் மொழியைக் கற்றுக்கொள்வது அந்நாட்டினுடனான நமது உறவை வலுப்படுத்தும் என்று நேற்று கூச்சிங்கில் எஸ்ஜேகே(சீ) சங் ஹுவா எண் 4 இன் புதிய துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் கூறினார்.
இன்றைய உலகம் வேறுபட்டது, அதில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டியுள்ளது. தொடர்பு வைத்துக்கொள்ள நாம் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றாரவர்.
“ஆங்கிலம் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நாம் மேன்டரின் மொழியிலும் திறமையுள்ளவர்களாக இருப்பது அவசியமாகிறது. அப்போதுதான் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக எழும்பவிருக்கும் சீனாவுடன் நாம் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்”, என்று பிரதமர் நஜிப் மேலும் கூறினார்.
தேசியமொழியான பகசா மலேசியாவில் தேர்ச்சி பெற்றிருப்பது நமது தேசிய அடையாளத்தை நிலைநிறுத்த உதவும் என்றார்.
அரசாங்கம் இந்நாட்டில் சீனமொழிக் கல்வியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறிய அவர், அது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசாங்கத்தின் முற்போக்கான கல்விக் கொள்கையாக இருந்துள்ளது
“நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட போது சீனமொழிப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது. நான் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். அந்தப் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட்டது.
“நான் தேசிய கல்விப் பெருந்திட்டத்திற்கும்கூட ஆதரவு கொடுத்து சீனமொழிப்பள்ளிகள் இங்கு தொடர்ந்து இருப்பதையும் அவை நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றுவதையும் உறுதிப்படுத்தினேன்”,என்று நஜிப் கூறினார்.
-த ஸ்டார்.
நேரத்திற்கு நேரம் பேசும் ஈனம் – சீ.
நம்பநம்பிக்கைநாயகர்உலகமகா தலை
சிறந்த நடிகர்.அதைபாராட்டும்விதமாகத்தான்
2,6பில்லியன் நன்கொடை பரிசு அளித்தார்கள்
போல.இன்னுன்ம்நல்லாநடிங்க பாஸ்.
லாலாங் புல் அங்கும் இங்கும் , காற்று போகும் பக்கமெல்லாம் சாய்கிறது .
Good!