நேற்று பின்னேரம் பிலிப்பீன்சின் மிண்டானாவ் தீவைத் தாக்கிய நில நடுக்கத்தில் நால்வர் உயிரிழந்தனர் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கட்டிடங்கள் சில சேதமடைந்ததாகவும் பல இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நிலநடுக்கம் சூரிகாவ் நகருக்கு 13கிலோ மீட்டர் தொலைவில் 10கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக யுஎஸ் புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை அபாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் நில அதிர்வு பதிவு வாரியத் தலைவர் ரெனாடோ சொலிடும், நிலநடுக்கத்துக்குப் பிந்திய 89 அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். தொடர்ந்து பல அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார். ஆனால் அவற்றால் ஆபத்து இருக்காது.