கூட்டரசுப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டிருக்கும் கெண்டூரி ரக்யாட் 1 நிகழ்ச்சித் தொடரில் முதலாவது நிகழ்வு இன்று புடு உலு மக்கள் வீடமைப்புத் திட்ட(பிபிஆர்)ப் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு யாக்கூப், வாக்காளர்கள் அந்த நாடாளுமன்றத் தொகுதியை பாரிசான் நேசனலிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுமார் 3,000 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய தெங்கு அட்னான் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் டிஏபி செராஸ் எம்பி டான் கொக் வாய்க்கு “ஆச்சரியத்தைக் கொடுக்க” ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றார்.
“உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களை (டிஏபியை) ஆச்சரியப்படுத்துங்கள்”, என தெங்கு அட்னான் தமதுரையில் கேட்டுக்கொண்டார்.
அந்நிகழ்வில், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் லோக பால மோகன், செராஸ் அம்னோ இளைஞர் தலைவர் சைட் அலி அல்-ஹப்ஷி, கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்ட் அசிஸ், செராஸ் பாரிசான் நேசனலின் மற்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முதலானோரும் கலந்து கொண்டனர்.
தெங்கு அட்னான், தம் அமைச்சு பிபிஆர் பிள்ளைகளுக்கு இலவச பேருந்து சேவையை வழங்கி வருவதாகவும் விலாயா செரியா தள்ளுபடி அட்டை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்..
அத்துடன் பூலாடான் செராஸிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும்படி மாநகராட்சி மன்றம் பணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்த கம்மனாட்டி போன்ற ஈனர்களை என்ன என்று சொல்வது? எப்போதும் உட்கார்ந்து கொண்டு அலுங்காமல் திங்கவே எல்லாம்.
ரிபீட் — என்ன சொன்னாய் றிப்பிட்டு . புது டெக்னிக் — சோறு போட்டு —-ஓட்டு—. எவ்வளவு சீப்பாகிவிட்டது பாரிசான்—
உண்மை…உண்மை…உண்மை…
வரும் பொதுத் தேர்தலில் நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன…உங்களுக்கு..!