யுஇசிக்கு அங்கீகாரம் இல்லை என்று அரசாங்கம் முடிவாகச் சொல்ல வேண்டும், பெர்காசா கூறுகிறது

 

UECnoமலாய்க்காரர்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா யுஇசி (Unified Examination Certificate) என்ற தேர்வுச் சான்றிதழுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது “தேசிய ஒற்றுமை” என்ற கருத்துக்கு எதிராகச் செயல்படுவதாகும் என்று கூறிய பெர்காசாவின் கல்விப் பிரிவின் தலைவர் அப்துல் ரவோப் ஹூசின், அந்த சீனப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதாகக் கூறினார்.

யுஇசிக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை பெர்காசா கடுமையானதாக் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

டோங் ஸோங் என்ற சீனமொழிக் கல்வி அமைப்பு இந்த யுஇசி தேர்வை நடத்துகிறது. யுஇசி சான்றிதழுக்கு உலகின் மிகச் சிறந்த 800க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிலையங்கள், ஆக்ஸ்பர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், சிங்கப்பூர் போன்ற பல்கலைக்கழகங்கள் உட்பட, அங்கீகாரம் அளித்துள்ளன. ஆனால், மலேசியாவில் அதற்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

கடந்த வாரம், துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி தேசிய அளவில் யுஇசியை அங்கீகரிப்பது பற்றிய ஓர் ஆய்வையும் மதிப்பீட்டையும் செய்யுமாறு கல்வி அமைச்சு கேட்டுகொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்காக மசீச அவருக்குப் பாராட்டு தெரிவித்தது.