புதிதாக நியமிக்கப்பட்ட பெல்டா தலைவர் ஷாரிர் அப்துல் சமட் பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் முதல் பொதுப்பங்கு வெளியீடு(ஐபிஓ) செய்தபோது கிடைத்த ரிம4.3 பில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது என்பது மர்மமாக உள்ளது என்றார்.
“பெல்டா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது அதற்கு ரிம6 பில்லியன் கிடைத்தது……..அதிலிருந்து ரிமா1.7 பில்லியன் பெல்டா குடியேற்றக்காரர்களுக்காகச் செலவிடப்பட்டது.
“குடியேற்றக்காரர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரிம15,000 கொடுக்கப்பட்டது. மீதமிருந்தது ரிம4.3 பில்லியன்.
“அந்த ரிம4.3 பில்லியன் எங்கே?”, என்றவர் வினவியதாக சினார் ஹரியான் கூறியது.
விடைதெரியாத இக்கேள்வி பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பெல்டாவில் ரிம200 மில்லியன் முறையாக செலவிடப்படவில்லை என்று கூறுவதை ஷாரிர் சுட்டிக்காட்டினார்.
“அதைத் திரும்பப் பெற முயல்வோம். ஆனால், எல்லாம் கிடைக்கும் என்று தோன்றவில்லை.
“ஒப்புதலின்றியும் நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் பல காரியங்கள் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“அந்த வகையில் பெல்டாவின் நிதிநிலையைச் சரிப்படுத்துவதே என்னுடைய கடமை”, என்றாரவர்.
ஐயா ஷ்ரிர் அவர்களே உங்கள் மேல் எனக்கு சிறிது மரியாதை இருந்தது- காக்காத்திமிரை எதிர்த்து பதவியை உதறி விட்டு சலவை தொழில் ஆரம்பித்தது மிகவும் மதிப்புக்குரியது. இப்போது புரிகிறதா அம்னோ நாதாரிகள் எவ்வளவு ஊழல் வாதிகள் என்று? உங்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது- இப்போது ஊழல் நாட்டை கொள்ளை அடித்து அம்னோ நாதாரிகளை பணத்தில் மிதக்க வைத்துக்கொண்டு இருக்கிறது- இதில் பாதிக்கப்படுவது என்னைப்போன்றவர்கள்தான். நீங்கள் அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரியும். நீங்கள் ஒருவர்தான் சிறிது கொள்கை உள்ளவர்– ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்.
ஐயா ஷ்ரிர் அவர்களே– தட்டையே திருப்பிவிட்டீரே? நம்பிக்கை நாயகன் பணம் விளையாடுதோ? இருந்த கொஞ்சம் மரியாதையும் ………………………………..