பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் சேர்வது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தும்படி பாஸ் கூறியுள்ளது.
அவ்விவகாரத்தில் ஒரு மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டுமென பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) அவைத் தலைவர் பாஸுக்கு கெடு விதித்திருப்பது முறையல்ல என பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட் கூறினார்.
பாஸ் கட்சியும் பெர்சத்துவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாஸ் பக்கத்தானில் சேர்வது குறித்து ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளன.
பாஸ் பக்கத்தானில் பங்கேற்பது முக்கியமான விஷயம். அதன்மீது சட்டென்று முடிவெடுத்து விட முடியாது, அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என இட்ரிஸ் தெரிவித்தார்.
மகாதிர் சொல்வது வரவேறேகத்தக்கது.
இந்த பாஸ்கட்சி காரானுக்கு அம்னோவுடன் கூட்டு சேரவே விருப்பம். அப்போதுதான் அவன் விரும்பும் இஸ்லாம் சட்டமும் மாற்றங்கள் உருவாகும்…அதே சமயம் ஜ.செ,க வுடன் எதிரணியில் சேர்ந்திருந்தால் பாஸுக்கு தன் காரியம் நிறைவேறாது என்பது அவனுக்கே தெரியும்.
ஆனால் இந்த உண்மை தெரியாத வான் அம்மையாருக்கு பாஸ் மேல் எப்போதும் ஒர் அலதி பாசம். அதனால் பாஸ் கட்சியை ஒரேயடியாக கழற்றிவிட அம்மையார் தயங்குகிறார். ஆனால்..மகாதிர் கட்சியை எந்த நேரத்திலும் கழற்றி விட அம்மையார் தயாராக இருக்கிறார்.
எனவே, தேர்தல் நெருங்க நெருங்க இந்த பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கலாம்.
அப்படி வெடிக்கக் கூடாது, எல்லாம் சுமூகமாக நடந்து, வரும் பொதுத் தேர்தலில் எதிரணி ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதற்கு அன்வார் வெளியே வந்தாக வேண்டும்.
ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை.
எதிரணியில் பிரளயமும் பிளவும் ஏற்படும் என்பது இன்றைய சூழ்நிலையில் கசப்பான உண்மை..மகாதீர் கட்சியும், ஜ.செக வும் அமனாவும் ஓர் எதிரணியிலும், மற்றுமோர் எதிரணியில் பி.கே.ஆரும் நிலா கட்சியும் கூட்டு சேரும்.
இந்தப் பிளவை நானும் விரும்பவில்லை…மார்ச் 25-க்குப் பிறகு நாம் விரும்பாதது எல்லாம் நடக்கும். ஆனால் நாம் விரும்பும் ஆட்சி மாற்றம்…? நடந்து விடுமா என்ன…பொறுத்திருந்து பார்ப்போம்… காட்சிகள் மாறுவதை..