மலாக்காவில் டிஏபி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக ஓரியெண்டல் டெய்லி ஆன்லைன் இன்று அறிவித்தது.
கோட்டா மலாக்கா எம்பி சிம் தோங் ஹிம், டுயோங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சான், பாச்சாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் ஜாக் வொங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூங் சியோங் ஆகிய அந்நால்வரும் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தங்கள் முடிவை அறிவித்ததாகக் கூறப்பட்டது.
ஓரியெண்டல் டெய்லியின் செய்தியுடன் செய்தியாளர் கூட்டத்தின் காணொளி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
தங்கள் முடிவு உடனடியாக நடப்புக்கு வருவதாகத் தெரிவித்த அந்நால்வரும், டிஏபி அதன் தொடக்கக் காலக் குறிக்கோளைவிட்டு விலகிச் சென்றுவிட்டதாகவும் அதுவே தங்கள் முடிவுக்குக் காரணம் என்றும் கூறினர்.
அவர்களின் விலகலால் மலாக்காவில் இப்போது டிஏபிக்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எம்பி எவரும் இலர்.
பணம் பேசும் . இவர்கள் கொள்கையில் சீனர் மட்டுமே வேண்டும்.
appanum mavanum DAP yil seiyum aniyaayangalai ivvalavu naatkalaaga eppadi poruththuk kondirunthhergalo.
கடந்த தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்கவைத்தது உங்களையோ உங்களுக்காகவோ அல்ல..மாறாக ஜ.செ.க என்கிற ஆலமரத்துக்கு..அதன் விழுதுகளாக இருந்து அம்மரத்தை தாங்கிப்பிடிக்க வேண்டிய நீங்கள், கட்சிக் கொள்கை பிடிக்கவில்லை என்றால் கட்சியிலிருந்து விலகாமல் பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும்..மாறாக இப்படி குரங்குத்தனம் பண்ணுவது உங்கள் பி_ப்பையே கேள்விக்குரியதாக்கும்..
உங்களை நம்பி வாக்கு அளித்த மக்களை முட்டாள் ஆக்கும் செயல் !
வணக்கம். கட்சி பிடிக்கவில்லை எனில், கட்சியினால் வந்த பதவியையும் துறக்க வேண்டும். மக்கள் கட்சி சின்னத்தை வைத்துதான் வாக்களித்தார்கள். இவர்களின் முகம் வாக்கு சீட்டில் எல்லை.