மலாக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பிரதிநிதிகள் டிஎபி கட்சியிலிருந்து விலகிக்கொண்டதை அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் டான் கோக் வை வரவேற்றார்.
அந்நால்வர் கூறிக்கொண்டத்தைப் போல் கட்சி அதன் உண்மையான நோக்கங்களிலிருந்து மாறவில்லை. மாறாக, அந்த நால்வரும்தான் மாறிவிட்டார்கள் என்றாரவர்.
“அவர்கள் கட்சிக்குள்ளிருக்கும் புற்றுநோய். தங்களுடைய விருப்பத்தற்கிணங்க அவர்கள் கட்சியை விட்டு விலகுவதால், நான் அதை வரவேற்கிறேன்”, என்று கோக் வை இன்று புடுவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நம்பிக்கை நாயகனின் பில்லியனுக்கு வேலை வந்து விட்டது. மலேஷியா போலே !