சாலே: கிட் சியாங், குவான் எங்மீது டிஏபி அடிநிலைத் தலைவர்கள் அதிருப்தி

dapமலாக்காவில்    டிஏபி   பிரதிநிதிகள்   நால்வர்    கட்சியிலிருந்து   விலகியது   அக்கட்சியின்   அடிநிலைத்   தலைவர்களுக்கு   டிஏபி   ஆலோசகர்   லிம்  கிட்  சியாங்   டாக்டர்    மகாதிர்   முகம்மட்டுடன்   கூடிக்குலாவுவது    பிடிக்கவில்லை    என்பதைக்   காட்டுவதாக   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்   கெருவாக்    கூறினார்.

கிட்   சியாங்மீதும்   தலைமைச்    செயலாளர்   லிம்    கிட்   சியாங்மீதும்     அவர்களின்    அதிருப்தி   உச்சக்   கட்டத்தை    எட்டி   விட்டதுபோல்    தெரிகிறது   என்றாரவர்.

“எதிரணி   2008-இலும்   2013-இலும்      அடைந்த   ஆதாயங்களை   எல்லாம்  அடுத்த   பொதுத்    தேர்தலில்    இழக்கப்    போகிறது”,  என  சாலே   தம்முடைய    sskeruak.blogspot.my,  வலைத்தளத்தில்    கூறினார்.