மலேசியாவில் தீவிரவாதம் இல்லை– நஜிப்

najibநாடு   அமைதியுடனும்   நல்லிணக்கத்துடனும்    திகழ்வதை   உறுதிப்படுத்த   மலேசியர்கள்       மிதவாதத்தையே     எப்போதும்   கடைப்பிடித்து  வர  வேண்டும்   என்கிறார்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்.  அப்போதுதான்     அரசாங்கத்தால்     மக்களின்   வாழ்க்கைத்    தரத்தை    உயர்த்த   பல்வேறு   திட்டங்களையும்   வகுக்க   முடியும்.

மிதவாதம்    இருந்தால்    மட்டுமே    நாட்டின்   பல்லினங்கள்   தடைகளும்   சச்சரவும்    இன்றி  ஒன்றுபட்டிருக்கவும்   தத்தம்    சமயங்களையும்   பண்பாடுகளையும்   பின்பற்றவும்   முடியும்    என்றாரவர்.

“இந்நாட்டில்      தீவிரவாதம்   இல்லை.  மிதவாதமே   உண்டு.  இஸ்லாமும்  மிதவாதத்தையே   வலியுறுத்துகிறது.

“சமயம்தான்     வேறே    தவிர,   பெளத்தத்திலும்     அக்கோட்பாடு    உண்டு.   இப்போதைய    பிரச்னகளுக்கு     சமயங்கள்     காரணமல்ல,   சமயங்களில்    தீவிரவாதிகள்   இருப்பதே   காரணம்”,  என்றார்.

பெந்தோங்   சதுக்கத்தில்      2017    மலேசிய   சீனப்   புத்தாண்டுத்    திறந்த   இல்ல  உபசரிப்பைத்    தொடக்கி  வைத்தபோது   நஜிப்    இவ்வாறு   பேசினார்.  அந்நிகழ்வில்    அவரின்  துணைவியார்  ரோஸ்மா   மன்சூரும்   கலந்து   கொண்டார்.