சிறைக் கைதி கழிப்பறையில் விழுந்ததால் காயமடைந்தார்: போலீஸ் விளக்கம்

chandranசிறைக்  கைதி   சந்திரன்   முனியாண்டியின்    காயங்களுக்கு   போலீஸ்  காரணமல்ல     அவர்    வழுக்கி  விழுந்ததுதான்   காரணம்     என  தென்  செபறாங்   பிறை   போலீஸ்   தலைவர்    ஷாபி  அப்துல்   சமட்   தெரிவித்தார்.

அந்த   42-வயது   கைதி   கழிப்பறையில்   விழுந்ததில்   தலையில்   காயம்   பட்டது    என்றும்     அவருக்குத்   தோல் நோய்   இருந்ததால்    சிறையில்   உள்ள   மருந்தகத்தில்   கால்  நகங்கள்    அகற்றப்பட்டதுதான்      அவை   “காணாமல்   போனதற்கு”க்  காரணம்     என்றும்    அவர்    சொன்னதாக    த    ஸ்டார்    ஆன்லைன்   கூறியது.

சிறையில்   சந்திரன்   துன்புறுத்தப்பட்டதாகக்   கூறப்படுவதை    மறுத்த   ஷாபி,  அவர்   ஒரு  மனநோயாளி    என்றும்   குறிப்பிட்டார்.

சந்திரனின்   தாயார்   தம்   மகன்    சிறையில்   அடித்துத்   துன்புறுத்தப்படுவதாக   சனிக்கிழமை  போலீசில்   புகார்   செய்திருந்தார்.

ஆறு  மாதச்  சிறைத்தண்டனை   விதிக்கப்பட்டு   ஜனவரி    20-இல்   சிறைக்குச்    சென்றபோது       ஆரோக்கியமாக  இருந்த   மகன்,     இப்போது   செபறாங்   பிறை   மருத்துவமனை   தீவிர   கவனிப்புப்   பிரிவில்  (ஐசியு)    தலையில்   காயத்துடனும்   கால்   நகங்கள்   இன்றியும்    கிடப்பது     ஏன்    என்று    அவர்  வினவினார்.