அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பீர்: கருவூல முன்னாள் தலைமைச் செயலாளர் அபாயச் சங்கு

civilஒரு   நெருக்கடி   நிலை    உருவாவதற்குமுன்     அரசாங்கம்  “பெருத்துக்  கிடக்கும்”  அதன்    ஊழியர்   எண்ணிக்கையைக்  குறைப்பது    நல்லது   என்று   முன்னாள்   கருவூலத்    தலைமைச்   செயலாளர்   முகம்மட்  ஷெரிப்    முகம்மட்   காசிம்    அறிவுறுத்தினார்.

“ஆள்குறைப்பது   அரசாங்கத்துக்கு    மிகுந்த   செலவை   உண்டு   பண்ணும்    என்றாலும்   அச்செலவை    ஏற்க   முடியும்    என்கிற    நிலை   இருப்பதால்   இப்போதே   அதைச்   செய்வதுதான்    நல்லது. இல்லையேல்  கிரீசில்    ஏற்பட்டதைப்போன்ற   பொருளாதார    நெருக்கடி      உண்டாகி   விடலாம்”,  என்றாரவர்.  அந்த  ஐரோப்பிய    நாடு      கடும்   பொருளாதாரச்  சிக்கலை    எதிர்நோக்கி    அரசு   ஊழியர்ளைத்   திடீரென்று   குறைக்க    வேண்டிய   கட்டாய    நிலைக்குத்   தள்ளப்பட்டதை    அவர்    சுட்டிக்காட்டினார்.

இன்றைய   நிலையில்    அரசாங்கத்தில்    ஆள்குறைப்புச்   செய்தால்   அவர்களிடம்   பரிவுடன்    நடந்து   கொண்டு    நியாயமான   முறையில்   அவர்களுக்கு   இழப்பீடு   கொடுக்க   முடியும்.   பொருளாதாரக்  கருத்தரங்கு   ஒன்றில்   கலந்துகொண்டு    பேசியபோது    ஷெரிப்   இவ்வாறு    கூறினார்.

அமைச்சுகளும்   அரசாங்கத்   துறைகளும்    திறமைக்குறைவாக     செயல்படுவதற்கும்     அவற்றின்   பொருளாதாரச்     செயல்பாடுகள்     தோல்வியில்   முடிவதற்கும்   அரசு   ஊழியர்   எண்ணிக்கை  பெருகிக்  கிடப்பதே   காரணம்    என்றாரவர்.

மலேசியாவில்   இப்போதைய   அரசாங்க   ஊழியர்   எண்ணிக்கை   1.6 மில்லியன். இவர்களுக்குச்   சம்பளமும்  அலவன்சும்    கொடுக்க   ஆண்டுக்கு   ரிம76 பில்லியன்   செலவாகிறது.   பணி ஓய்வு   ஊதியதுக்காக    மேலும்    ரிம21.6 பில்லியன்    செலவிடப்படுகிறது.