குவான் எங்: நால்வர் வெளியேற்றம் பிஎன்னுக்கு ஒரு ‘அன்பளிப்பு’

guanகட்சிப்  பிரதிநிதிகள்    நால்வர்   கட்சியிலிருந்து   விலகியதைச்    சாடிய     டிஏபி   தலைமைச்   செயலாளர்   லிம்   குவான்   எங்,  அவர்கள்  விலகியது    “பிஎன்னுக்குக்  கிடைத்த   ஓர்   அன்பளிப்பு”    என்றார்.  வெறும்    வாயை மெல்லுகிறவர்களுக்கு  ஒரு பிடி அவல் கிடைத்ததுபோல்    ஆகிவிட்டது.

அவர்களின்  விலகல்    “எதிர்பாராத   ஒன்று”   என்றவர்   சொன்னார்.  அவர்களில்   ஒருவர்,  கோத்தா   மலாக்கா    எம்பி    சிம்   தோங்  ஹிம்    1986ஆம்   தேர்தலில்   போட்டியிட    லிம்  கிட்   சியாங்கால்   தேர்ந்தெடுக்கப்பட்ட   ஒரு   வேட்பாளர்.

“2013   தேர்தலில்    சிம்  கோத்தா   லக்‌ஷ்மனா   சட்டமன்றத்   தொகுதியில்    டிஏபி   வேட்பாளரை    எதிர்த்து   சுயேச்சையாக    போட்டியிட்டபோதே   அவரை   கட்சியிலிருந்து   நீக்க   முடிவு    செய்யப்பட்டது.  அப்போதும்   லிம்   கிட்  சியாங்தான்   அவரைக்   காப்பாற்றினார்”,  என  குவான்   எங்   ஓர்     அறிக்கையில்   கூறினார்.

சிம்    தப்பானவர்கள்   பேச்சைக்  கேட்டு   தவறாக   நடந்து   கொள்கிறார்   என்றும்   அவர்   என்றென்றும்     விசுவாசிதான்    என்றும்   கட்சி   நம்பியது.

“2013-இல்   கட்சிக்குத்   துரோகமிழைத்தபோதுகூட    சிம்  ‘டிஏபி  தொண்டனாகவே  வாழ்கிறேன்     டிஏபி    தொண்டனாகவே    சாவேன்’    என்று   சூளுரைத்தார்.

“சிம்  கட்சியிடம்   மட்டுமல்லாமல்    டிஏபியை    ஆதரித்த    மக்களிடமும்  அளித்த   வாக்குறுதியை    மீறிவிட்டார்”,   என்று   லிம்  கூறினார்.

சிம்-மும்   சட்டமன்ற   உறுப்பினர்கள்  கோ   லியோங்   சான்(டூயோங்),  லிம்   ஜக்   வோங்(பாச்சாங்),  சின்  சூங்  சியோங்( கெசிடாங்)   ஆகியோரும்     நேற்று   டிஏபி-இலிருந்து   வெளியேறுவதாக   ஒரு  திடீர்   அறிவிப்பைச்   செய்து   அதிர்ச்சியை   ஏற்படுத்தினர்.

சிம்மையும்   அவரைச்   சார்ந்தவர்களையும்    நம்பியது   தப்பாக    போய்விட்டது   என  லிம்   கூறினார்.

“35  ஆண்டுகளாக   கட்சியில்   இருந்தவர்   விலகிச்   செல்வதை   நினைத்தால்   வருத்தமாகத்தான்   இருக்கிறது.

“பின்னோக்கிப்   பார்க்கையில்    ஒன்றைப்  புரிந்து   கொள்ள   முடிகிறது,    2015  மலாக்கா   டிஏபி   கட்சித்   தேர்தலில்   கட்சித்   தொண்டர்கள்   அவர்களை   நிராகரித்ததை   சிம்மாலும்   அவரைச்    சாந்தவர்களாலும்     ஏற்றுக்கொள்ள   முடியவில்லை   என்பது   தெளிவாக   தெரிகிறது”,  என்றாரவர்.

அத்தேர்தலில்   கோ-வுக்குப்   பதிலாக   பண்டார்   ஹிலிர்  பிரதிநிதி   தே   கொக்  தியு     மலாக்கா    டிஏபி    தலைவராக     தேர்ந்தெடுக்கப்பட்டார்.