அடுத்தப் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் பொதுச் சேவைத்துறையைச் சீர்திருத்தம் செய்வது அதன் முக்கிய திட்டமாக இருக்கும் என்று அதன் தலைமைச் செயலளாரர் சைபுடின் அப்துல்லா கூறுகிறார்.
“நாங்கள் புத்ராஜெயாவை வென்றால், நாங்கள் செய்யும் முதல் வேலை பொதுச் சேவைத்துறையை சீர்திருத்துவதற்கான ஓர் அதிகாரப்பூர்வமான அறிக்கையைத் தயார் செய்வதாகும்.
“அந்த அதிகாரப்பூர்வமான அறிக்கை நாடாளுமன்றத்தில் அதன் ஒப்புதலுக்காகச் சமர்பிக்கப்படும்”, என்றாரவர்.
பொதுச் சேவைத்துறையும் ஆட்சியும் மக்களின் எதிர்பார்ப்பைச் சந்திக்கத் தவறிவிட்டன என்று அம்னோ முன்னாள் துணை அமைச்சரான சைபுடின் கூறினார்.