தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு டிஎபி பிரதிநிதிகள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் நாளை மலாக்காவுக்குச் செல்கின்றனர்.
நாளை முழுவதும் கிட் சியாங் மக்களைச் சந்திக்கிறார். அதன் பின்னர் இரவில் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்துகிறார். குவான் எங் கட்சித் தலைவர்களை இரவில் சந்திக்கிறார்.
இந்த நால்வரின் விலகல் மலாக்கா சட்டமன்றத்தின் டிஎபி உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து விட்டது. ஆக, இந்த வருகையின் நோக்கம் இவர்களில் விலகலால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கண்டறிவதாகும் என்று நம்பப்படுகிறது.
நீ பாஸ் கட்சிகுள் குழப்பம் செய்தாய் இன்று உன் கட்சியில் குழப்பம் வந்து விட்ட்து இது ஆரம்பம் தான்
சிம் டிஏபி யின் மிஸ்டர் நைஸ் என்பது மலாக்கா மக்களுக்குத் தெரியும், அவர் கட்சியின் நல்ல தொண்டர் என்பது கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். கட்சியின் பெரும் புள்ளி லிம் கிட் சியாங்கின் புதல்வரும், பினாங்கு முதல் அமைச்சருமான லிம் குவான் எங் மற்றும் அவரின் மனைவி பெட்டி ச்சூ இருவரும் 2004 ம் ஆண்டு மலாக்கா மாநிலக் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப் பட்டவர்கள். அப்பொழுது மலாக்கா மாநிலத் தலைவராக இருந்தவர், இப்பொழுது பதவி விலகி இருக்கும் சிம், 35 ஆண்டுகள் கட்சியில் அவர் வளர்ந்தார் என்பதை விடக் கட்சியை அவர் வளர்த்தார் என்றால் மிகையாகாது. கட்சி தேர்தல்களில் குறிப்பாக மலாக்காவில் லிம் குவான் எங் தோல்விக்கு வஞ்சம் தீர்க்கும் வண்ணம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லிம் குவான் எங், சிம்மை வீழ்த்த முயன்றது அனைவரும் அறிந்தது. ஆனால் 2015 ல் சிம்மை, அகற்ற, கட்சி சட்ட விதிகளுக்கு எதிரான செயலை மேற்கொண்டது பலருக்கு தெரியும். அடுத்த தேர்தல் வேட்பாளர் மட்டும் பணம் பதவிகான வாக்குறுதிகளை அளித்து ஓட்டுகளை விலைக்கு வாங்கியதைக் கட்சி உறுப்பினர்கள் அறிவர்.
லிம் குவான் எங்கின் நீதியற்ற தேசியத் தலைமை மாநிலத் தலைவர் சிம்மிற்கு எதிராக மேற்கொண்ட தொடர் தாக்குதல்களைக் கண்டிக்கும் வண்ணமே சிம்முடன் மற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறியக் காரணம். உண்மையில் பின்னுக்கு அன்பளிப்பு வழங்கியது சிம் அல்ல! லிம் குவான் எங் என்பதை மலாக்கா ஜ.செ, க உறுப்பினர்களுக்கு நன்கு அறிவர்.
appanum mavanum DAP mattumallaathu, naattu makkalaiye kuzhappum vishayam ippothuthaan konjam konjamaaga theriya varugirathu.