பணிநீக்கம் செய்யப்படும் அரசுப் பணியாளர்களில் மருத்துவத் துறை சம்பந்தப்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும் என்கிறார் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா.
அவர்களில் நூறு நாள்களுக்குமேல் வேலைக்கு வராமல் காணாமல்போகும் பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர்.
“இந்தப் பயிற்சி மருத்துவர்கள் சில வேளைகளில் 400 நாள்களுக்குக்கூட காணாமல் போய் விடுகிறார்கள்”, என்றாரவர்.
வேலை அழுத்தத்துக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் சொன்னார்.
மருத்துவர்களாக பயிற்சி பெறுவோர் நீண்ட காலம் வேலைக்கு வராமல் காணாமல் போய் விடுகிறார்கள் என்று கூறும் சுகாதார அமைச்சின் அறிக்கை குறித்து கருத்துரைத்தபோது அலி இவ்வாறு கூறினார்.
அது மருத்துவத் துறைமீது தாக்கத்தை உண்டு பண்ணும் விவகாரம் என்பதால் பொதுச் சேவைத் துறையும் சுகாதார அமைச்சும் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
வேலைக்கு வராமல் காணாமல் போவோர் அவர்களின் படிப்புக்காக இலட்சக்கணக்கில் செலவிட்டு தியாகம் செய்துள்ள பெற்றோரின் தியாகத்தை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.
வேலைக்கு ‘வந்ததாக’ கார்ட் ‘பஞ்ச்’ செய்து விட்டு காணாமல் போகும் அரசு ஊழியர்களும் ஏராளம்..அதற்கு உங்கள் பதிலும் தீர்வும் என்ன?
மருத்துவத்துறையில் ஆர்வமே இல்லாதவனை வலுக்கட்டாயமாக ‘படிடா’ என்றால் இப்படித்தான் நடக்கும்!